Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த இடங்களில் அடிக்கடி வலியை சந்திக்குறீங்களா? அப்ப அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்.. உஷார்..
Heart Attack Symptoms In Tamil: தற்போது மாரடைப்பால் தினந்தோறும் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். இந்நிலையில் இதய தசைகள் போதுமான இரத்தம் கிடைக்காமல் இறக்கத் தொடங்குகிறது.
பொதுவாக இது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்பினால் ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி இரத்த ஓட்டத்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது இதயத்தில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி, மரணத்தை உண்டாக்கிவிடும்.

முன்பெல்லாம் மாரடைப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 25 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தற்போது ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் காரணம். பொதுவாக மாரடைப்பின் அறிகுறி என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது நெஞ்சு வலி தான்.
ஆனால் மாரடைப்பானது வெறுமனே நெஞ்சு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தாது. இதன் அறிகுறி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதற்கான உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் வலி மாரடைப்பின் அறிகுறியல்ல. உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் வலி மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இப்போது மாரடைப்பை குறிக்கும் அந்த வலிகளைக் காண்போம்.
நெஞ்சு வலி
மாரடைப்பின் ஒரு பொதுவான வலி தான் நெஞ்சு வலி. அதுவும் இது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்கும். மேலும் இப்படியான வலி இடது பக்கத்தில் அல்லது நெஞ்சு பகுதியின் மையப் பகுதியில் ஏற்படக்கூடும்.
கை வலி
நீங்கள் அடிக்கடி கை வலியை சந்திக்கிறீர்களா? அதுவும் ஒன்று அல்லது இரண்டு கைகளிலுமே வலி, அசௌகரியத்தை சந்திப்பதோடு, வலியானது நெஞ்சு பகுதியில் இருந்து இடது கை வரை பரவுவதை அனுபவித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாகும். சில சமயங்களில் இந்த வலியானது தோள்பட்டையிலும் இருக்கும்.
தொண்டை மற்றும் தாடை வலி
மாரடைப்பின் மற்றொரு வித்தியாசமான அறிகுறி தான் தொண்டை மற்றும் தாடைப் பகுதியில் வலியை சந்திப்பது. அதுவும் நடக்கும் போது அல்லது உடற்பயிற்சியின் போது இந்த வலியை சந்திக்க நேரிடலாம். அதோடு பல் வலி, கழுத்துப் பகுதியில் அசௌகரியம் போன்றவற்றை அதிகம் உணரக்கூடும்.
வயிற்று வலி
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், உண்மையில் வயிற்று வலியும் மாரடைப்பின் அறிகுறியாகும். அதுவும் இந்த வலி தொப்பையின் மேல் பகுதியில் ஏற்படும். குறிப்பாக இந்த வலியின் போது வயிற்றுப் பகுதி இறுக்கமாக அல்லது அழுத்துவது போன்று இருக்கும். அத்துடன் வாந்தியையும் சந்திக்க நேரிடலாம்.
வலி இல்லாமை
மாரடைப்பு வலி கட்டாயம் ஏற்படுத்தும் என்பதில்லை, சிலலருக்கு அமைதியாக எவ்வித வலியையும் ஏற்படுத்தாமல் இருக்கும். இப்படியான மாரடைப்பை சைலன்ட் மயோகார்டியல் இஸ்கிமியா என்று அழைப்பர். பெரும்பாலும் இப்படியான நிலை சர்க்கரை நோயாளிகளிடையே தான் காணப்படும். அதுவும் வயதானவர்கள் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை கொண்டவர்களிடையே காணப்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் மாரடைப்பின் அறிகுறிகள் என்று சொன்னால் நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் மாரடைப்பு நெஞ்சு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்துவதில்லை. உடலின் பிற பகுதிகளிலும் வலியைத் தூண்டலாம். அதுவும் இந்த வலியுடன் ஒருவர் மிகுதியான வியர்வை, படபடப்பு, தலைச்சுற்றல் போன்றவற்றை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள். இப்படி தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ளும் போது மாரடைப்பால் இறப்பதைத் தவிர்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications