Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
உடம்பின் இந்த 5 பகுதிகளில் வலியை சந்திச்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி!
Heart Attack Symptoms In Tamil: சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் மாரடைப்பால் ஏராளமானோர் மரணமடைந்து வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதிலேயே நிறைய பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது உண்டாகிறது. இந்த மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தில் கடுமையான சேதம் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும். நிறைய பேர் மாரடைப்பு என்றால் மார்பு பகுதியில் தான் வலி ஏற்படும் என்று நினைக்கின்றனர். ஆனால் நமது உடலின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு உறுப்பும் மற்றொன்றுடன் தொடர்புடையது.

எனவே ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அது உடலின் பிற பகுதிகளில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இப்படி ஏற்படும் வலியை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், உயிரிழப்பை தடுக்கலாம். இப்போது நெஞ்சு வலியைத் தவிர உடலின் வேறு எந்த பகுதியில் ஏற்படும் வலி மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் என்பதைக் காண்போம்.
1. நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
நெஞ்சு பகுதியில் ஏதாவது அழுத்துவது போன்றோ, இறுக்குவது போன்றோ இருக்கிறதா? அதுவும் அது சில நிமிடங்கள் நீடித்திருக்கலாம் அல்லது வந்து வந்து போகலாம். அதோடு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் போன்றவற்றையும் சந்தித்தால், அதை ஒருபோதும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
2. மேல் உடல் வலி
உடலின் மேல் பகுதிகளான கை வலி, தோள்பட்டை, கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளில் வலியோ அல்லது அந்த வலி அப்படியே பரவுவதை உணர்ந்தாலோ, கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உடலின் இடது பக்கத்தில் இப்படியான வலியை மந்தமாகவோ அல்லது கூர்மையாகவோ சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இதுவும் மாரடைப்பின் ஒருவிதமான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
3. சுவாசிப்பதில் சிரமம்
சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? அதுவும் ஓய்வு எடுக்கும் போதோ அல்லது மிதமான வேலைகளை செய்தாலோ, கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் பலரும் நுரையீரலில் பிரச்சனை என்று தான் நினைப்பார்கள். ஆனால் இது மாரடைப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறியும் கூட. முக்கியமாக நெஞ்சு வலி வருவதற்கு முன் இப்படியான மூச்சுத்திணறல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
4. அஜீரணம், வாந்தி, குமட்டல்
மாரடைப்பு என்றால் நெஞ்சு பகுதியில் மட்டும் தான் வலி ஏற்படும் என்பதில்லை, அந்த நெஞ்சு வலி வருவதற்கு முன் காரணமின்றி குமட்டல், வாந்தி, அஜீரண பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். ஆகவே திடீரென்று நீங்கள் அஜீரண பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தால், அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்நிலையில் மருத்துவரை அணுகி உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.
5. தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இதயம் மூளைக்கு தேவையான இரத்தத்தை செலுத்துவதில்லை என்று அர்த்தம். இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைகிறது. இப்படி காரணமின்றி திடீரென்று தலைச்சுற்றலை அல்லது மயக்கத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைவில் மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்து பாருங்கள்.
முக்கியமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளின் போது நெஞ்சு வலி லேசாகவோ அல்லது கூர்மையாகவோ இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த அறிகுறிகள் தவிர அதிகப்படியான வியர்வை, கால்களில் வீக்கம், படபடப்பு போன்றவற்றையும் சந்தித்தால், அசால்ட்டாக இருக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
