Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
இளம் வயதிலேயே மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க போதும்...
Health Tips In Tamil: தற்போது இதய பிரச்சனைகளின் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மாரடைப்பால் நிறைய பேர் இறந்து வருகிறார்கள். முந்தைய காலத்தில் மாரடைப்பானது 50-60 வயதினருக்கு தான் வந்து கொண்டிருந்தது.
ஆனால் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மாரடைப்பு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போது உட்கொண்டு வரும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். மனித உடலில் இதயத்தின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது.

இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான் மனிதன் நீண்ட காலம் உயிர் வாழ முடியும். இதய ஆரோக்கியத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதயத்தின் ஆரோக்கியத்திற்கு HDL என்னும் நல்ல கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாது.
ஏனெனில் நல்ல கொழுப்புக்களானது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கிறது மற்றும் அதிகளவிலான கொழுப்புக்களை தமனிகளில் இருந்து கல்லீரலுக்கு மாற்றுவதன் மூலம் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
நல்ல கொழுப்புக்களானது ஒரு ஆணின் உடலில் சுமார் 40 mg/dl அல்லது அதற்கும் அதிகளவிலும், மற்றும் ஒரு பெண்ணின் உடலில் சுமார் 50-க்கும் அதிகமான அளவிலும் இருக்க வேண்டும். அதிகளவில் நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இருந்தால், இதய நோய்களின் அபாயம் குறைந்து, இதய நோயால் ஏற்படும் இறப்பு தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஆகவே மாரடைப்பு வரக்கூடாதெனில் ஜங்க் உணவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆரோக்கியமான மற்றும் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீழே நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ள சில முக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தாலே, மாரடைப்பைத் தடுக்கலாம்.
1. அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோவில், அதன் பெயருக்கு ஏற்ப நன்கு க்ரீமியாக இருக்கும். இந்த பழத்தில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் விரும்பினால், அவகேடோ பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்.
2. ஆலிவ் ஆயில்
இதுவரை சமையலுக்கு பலவிதமான எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென விரும்பினால், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளன. இந்த எண்ணெயை சமையலில் மட்டுமன்றி, சாலட்டுகளின் மேல் சிறிது ஊற்றியும் சாப்பிடலாம்.
3. நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், வால்நட்ஸ், ஆளிவிதை மற்றும் சியா விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மட்டுமின்றி, பிற அத்தியாவசிய சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தை பஜ்ஜி, போண்டா என்று சாப்பிடாமல், நட்ஸ், விதைகள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுங்கள். இது வயிற்றை நிரப்புவதோடு மட்டுமின்றி, உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
4. கொழுப்புள்ள மீன்
மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் பிற கொழுப்புள்ள மீன்கள் இந்திய கடலோரங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய மீன்களாகும். இந்த மீன்களில் வளமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடலினுள் உள்ள வீக்கத்தை/அழற்சியைக் குறைக்க உதவி புரிகின்றன.
மேலும் இந்த கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றன. ஆகவே மாரடைப்பு எதுவும் ஏற்படக்கூடாதெனில், இந்த வகை மீன்களை அதிகம் சாப்பிடுங்கள். அதுவும் எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடாமல், குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.
5. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
கொண்டைக்கடலை, கருப்பு காராமணி , பருப்பு வகைகள் போன்றவை இந்திய சமையலில் இடம் பெறும் மிகவும் முக்கியமான உணவுப் பொருட்களாகும். இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர வகை புரோட்டீன் அதிகளவில் நிறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த வகையான உணவுப் பொருட்கள் உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவி புரிகின்றன. ஆகவே இதயம் ஆரோக்கியமாக செயல்படவும், இதய நோய் எதுவும் வராமல் இருக்கவும் வேண்டுமானால், இந்த வகை உணவுகளை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications