Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
உடம்புல இரத்தம் கம்மியா இருக்கா? ஒரு மாதம் இந்த பழங்களை சாப்பிடுங்க.. சீக்கிரம் சரியாயிடும்..
Health Tips In Tamil: அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கிய உணவுகளானது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக இரும்புச்சத்தானது உடலின் பல்வேறு செயல்பாடுகள், ஆக்ஸிஜனை கொண்டு செல்வது, ஆற்றலை உற்பத்தி செய்வது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாடு போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது.
முக்கியமாக இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை உருவாக்க உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து மிகவும் குறைவாக இருந்தால், அதன் விளைவாக உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து இரத்த சோகையால் பாதிக்கப்படக்கூடும். முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டினால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போதுமான இரும்புச்சத்தை தினமும் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளதா? உடலில் இரத்தத்தின் அளவை இயற்கை வழியில் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளுங்கள். அதுவும் இந்த பழங்களை தினமும் உட்கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது இரும்புச்சத்து அதிகம் உள்ள பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து மட்டுமின்றி, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் பிற கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கும் மற்றும் இரத்த ஓட்டமும் சிறப்பாக இருக்கும். அதுவும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை மசித்து சேர்த்து குடித்து வந்தால், ஒரே மாதத்தில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
2. மாதுளை
கண்ணைக் கவரும் அழகான சிவப்பு நிற மணிகளைக் கொண்ட மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. இது தவிர இப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. ஆகவே உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், தினமும் ஒரு மாதுளையை உட்கொண்டு வர, உடலில் இரத்தம் நன்கு ஊறும்.
3. ஆப்ரிகாட்
உலர்ந்த மற்றும் நற்பதமான ஆப்ரிகாட் பழத்தில் கூட இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. அதுவும் 100 கிராம்பு ஆப்ரிகாட் பழத்தில் 3.7 மிகி இரும்புச்சத்து உள்ளது. அதோடு இதில் வைட்டமின் ஏ, பி கரோட்டீன் போன்ற கண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சத்துக்களும் உள்ளன. இது தவிர இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
4. பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் இரும்புச்சத்து அதிகளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பழங்கள் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகின்றன. ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இந்த வைட்டமின் சியானது இரும்புச்சத்தை உறிஞ்ச மிகவும் அவசியமான வைட்டமினாகும். எனவே இரும்புச்சத்து உணவுகளை உட்கொள்ளும் போது, அத்துடன் பெர்ரி பழங்களையும் சாப்பிட்டால், இரும்புச்சத்து உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.
5. தர்பூசணி
தர்பூசணிப் பழம் நீர்ச்சத்துள்ள பழம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அதில் இரும்புச்சத்தும் அதிளவில் உள்ளன. இந்த பழத்தை உட்கொண்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சிறுநீரகங்களும் சுத்தமாகும். இதில் உள்ள இரும்புச்சத்து உடலின் ஆற்றலை மேம்படுத்துவதுடன், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்கிறது. முக்கியமாக இப்பழத்தை உட்கொள்ளும் போது, அது நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோக செயல்முறையை மென்மையாக்குகிறது.
6. உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளன. அதுவும் ஒரு கையளவு உலர் திராட்சையில் 0.8 மிகி இரும்புச்சத்து உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. முக்கியமாக உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், தினமும் உலர் திராட்சையை சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications