Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
மாரடைப்பு வரக்கூடிய அளவில் இதயம் பலவீனமா இருக்கா? அப்ப இந்த ஜூஸ்களை அடிக்கடி குடிங்க போதும்...
World Heart Day 2023 In Tamil: தற்போது மாரடைப்பால் இளம் வயதிலேயே பலரும் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், ஜங்க் உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த ஜூஸ்களை அதிகம் உட்கொள்வதும் தான்.
மனிதன் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டுமானால் இதயத்தின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் இதயம் தான் உடலின் பிற உறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை அனுப்புகின்றன.

இந்த செயல்பாட்டில் இடையூறு ஏற்படும் போது, உடலின் பல பகுதிகளில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பலவீனமாக இருக்கும் இதயத்தை பலப்படுத்தவும் ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை நமக்கு அளித்துள்ளது.
அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் எடுக்கும் போது, இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலக இதய தினத்தை முன்னிட்டு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த குடிக்க வேண்டிய சில பானங்களைக் காண்போம்.
1. ABC ஜூஸ்
தற்போது மக்களிடையே ABC ஜூஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. ABC என்பது வேறொன்றும் இல்லை. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றுடன் சிறிது இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் ஆகும். இதில் உள்ள பீட்ரூட்டில் வைட்டமின் பி ஃபோலேட் உள்ளது. இது தமனிகள் தடிமனாவதைத் தடுக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த குழாய்களில் உள்ள அழற்சியை எதிர்ப்பதோடு, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. ஆப்பிள் pH அளவை சமநிலையாக பராமரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்கிறது. மேலும் இஞ்சி ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த ஜூஸைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
2. க்ரீன் ஜூஸ்
பசலைக்கீரை, பாகற்காய், வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீன் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் தொடர்ந்து குடித்து வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய சத்துக்களான ஃபோலேட், பொட்டாசியம், லுடீன் போன்றவை கிடைக்கும்.
இச்சத்துக்களானது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரியும். முக்கியமாக இந்த ஜூஸில் உள்ள பாகற்காய் கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு, இரத்த சர்க்கரை போன்றவற்றைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
3. நெல்லி, திராட்சை மற்றும் பீட்ரூட் ஜூஸ்
இந்த ஜூஸ் மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. அதுவும் இதில் உள்ள நெல்லிக்காய் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
அந்த நெல்லியுடன் பீட்ரூட் மற்றும் சிவப்பு திராட்சையை சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கும் போது, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுத்தும். கூடுதலாக இந்த ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளும் போது, உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதோடு, இரத்தத்தை சுத்தமாக்கும்.
4. பெர்ரி மற்றும் ப்ளம் ஜூஸ்
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. அதேப் போல் ப்ளம்ஸ் பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளன. இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கும் போது, அது மிகவும் சுவையாக இருப்பதோடு, இரத்தத்தை சுத்தமாக்கும், இரத்த சர்க்கரையை சீராக்கும் மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
5. செலரி, வெள்ளரிக்காய் மற்றும் பேரிக்காய் ஜூஸ்
இந்த ஜூஸில் உள்ள செலரி பித்தலைடுகளைக் கொண்டுள்ளன. இது தமனிகளின் சுவர்களை ரிலாக்ஸாக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் இரத்த ஓட்டமும் உடலில் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த ஜூஸில் உள்ள வெள்ளரிக்காய், 80% நீர்ச்சத்தை கொண்டுள்ளன. இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.
பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. ஆகவே இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து ஜூஸாக குடிக்கும் போது, இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு, இதயம் பாதுகாப்பாகவும், வலிமையாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications