Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
வயிறு நிறைய பிரியாணி சாப்பிட்டு இம்சையா இருக்கா? அப்ப இத செய்யுங்க... உடனடி நிவாரணம் கிடைக்கும்..
Health Tips In Tamil: பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த உணவுகளை கண்டால், கட்டுப்பாடின்றி வயிறு நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்களின் வீடுகளில் மட்டன் பிரியாணியை செய்திருப்பார்கள்.
உங்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால், நிச்சயம் மட்டன் பிரியாணியை மூக்கு பிடிக்க சாப்பிட்டிருப்பீர்கள். இப்படி பிரியாணியை வயிறு நிறைய கட்டுப்பாட்டின்றி சாப்பிட்டால், நிச்சயம் அது ஒருவித இம்சையை ஏற்படுத்தும்.

எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டால், அதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதுவே பல இம்சைகளை ஏற்படுத்தும்.
அப்படி நீங்களும் வயிறு நிறைய சாப்பிட்டு இம்சையை சந்தித்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை உணவு உண்டதும் செய்யுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
1. வஜ்ராசனம் செய்யவும்
பொதுவாக உணவு உட்கொண்டதும் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. ஆனால் வயிறு நிறைய உணவு உட்கொண்டதும், அதனால் சந்திக்கும் இம்சையில் இருந்து விடுபட வஜ்ராசனத்தை 15 நிமிடம் செய்யலாம். ஏனெனில் இந்த ஆசனமானது செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். மேலும் இந்த ஆசனமானது வாய்வு தொல்லை, மலச்சிக்கல் போன்ற அஜீரண கோளாறுகளில் இருந்தும் விடுவிடுக்கும்.
2. சுடுநீர் குடிக்கவும்
வயிறு நிறைய உணவு உட்கொண்டு மிகுந்த சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் உணவு உண்ட அரை மணிநேரம் கழித்து சுடுநீரை குடியுங்கள். அதுவும் எலுமிச்சை ஜூஸ், க்ரீன் டீ போன்ற சூடான பானங்களைக் குடித்தால், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமானத்தை சீராக்கும்.
3. புரோபயோடிக் எடுக்கவும்
நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தால், ஒரு பௌல் தயிர் அல்லது மோரை உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை ஊக்குவித்து, செரிமானத்தை வேகப்படுத்தி, அஜீரண கோளாறுகளில் இருந்து விடுவிக்கும்.
4. பற்களைத் துலக்கவும்
உணவு உட்கொண்டதும், பற்களைத் துலக்க சொல்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில், முதல் காரணம் இவ்வாறு செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தைக்கு வழிவகுக்கும் வாயில் சிக்கியுள்ள உணவுகள் வெளியேற்றப்படும். மற்றொன்று வாயில் உணவுகள் சிக்கியிருந்தால், அது மேன்மேலும் பசியைத் தூண்டிவிட்டு, கண்டதை சாப்பிட வைக்கும்.
5. சோம்பை மெல்லவும்
வயிறு நிறைய உணவு உண்ட பின், வாயில் சோம்பை போட்டு மெல்லுவதன் மூலம், உண்ட உணவுகள் எளிதில் ஜீரணிக்கப்படும். செரிமானம் இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், 1/4 டீஸ்பூன் ஓமம், 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகம், 1/4 டீஸ்பூன் சோம்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூளை எடுத்து, அவற்றை மெதுவாக நசுக்கி, வாயில் போட்டு சிறிது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இதனால் வயிறு இம்சையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications