Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சப்பாத்தியை தோசைக்கல்லில் சுட்டு சாப்பிடுவது நல்லதா? இல்ல நெருப்பில் சுட்டு சாப்பிடுவது நல்லதா?
Health Tips In Tamil: இந்தியாவில் சாதத்திற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் சாப்பிடக்கூடியது சப்பாத்தியைத் தான். அதுவும் நிறைய பேரது வீட்டில் தினமும் ஒருவேளையாவது சப்பாத்தியை செய்து சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட சப்பாத்தியை பொதுவாக தோசைக்கல் அல்லது தவாவில் போட்டு தான் சுடுவோம். இது தான் பாரம்பரியமாக சப்பாத்தி செய்யும் வழக்கம்.
ஆனால் தற்போது மக்கள் சப்பாத்தியை நெருப்பில் நேரடியாக சுட்டு சாப்பிடுகிறார்கள். தோசைக்கல்லில் சப்பாத்தியை செய்யும் போது, எண்ணெய் சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் நெருப்பில் சுடும் போது அது தேவையில்லை என்பதால், பலர் சப்பாத்தியை நெருப்பில் சுடுகிறார்கள். அதுமட்டுமின்றி, சப்பாத்தியை தோசைக்கல்லில் சுடும் போது சற்று நேரம் எடுக்கும். அதுவே நெருப்பில் சுடும் போது நேரம் மிச்சமாகும்.

ஆயினும் சப்பாத்தியை எப்படி செய்து சாப்பிடுவது நல்லது என்ற ஒரு கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இப்போது அந்த கேள்விக்கான விடையை இக்கட்டுரையில் காண்போம்.
சப்பாத்தியை நெருப்பில் சுடுவது ஆபத்தானதா?
சப்பாத்தியை நெருப்பில் நேரடியாக சுடுவது புற்றுநோயை உண்டாக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் இதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. மேலும் சப்பாத்தியை சமைக்கும் போது புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் சேர்மங்களின் அளவு குறைவாக இருப்பதாகவும், ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுகளின் அடிப்படையில் உயர் வெப்பநிலையில் சமைப்பதற்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது, அந்த மருத்துவர், நேரடியாக நெருப்பில் சுடும் உணவுகளுடன் புற்றுநோயை இணைக்க முடியாது. ஏனெனில் HCAs மற்றும் PAHs போன்ற கார்சினோஜென்கள் தான் மனித உடலில் உள்ள டிஎன்ஏவை மாற்ற காரணமாகவுள்ளன.
டிஎன்ஏ சேதமடைந்தால் கட்டாயம் புற்றுநோய் வரும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் மனித உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் திறன் கொண்டவை. எனவே அவ்வளவு எளிதில் டிஎன்ஏ-வில் சேதம் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும், அது அதிக வெப்பநிலையில் குறிப்பிட்ட ரசாயங்களை சமைக்கும் போது டிஎன்ஏ-வில் சேதமடையக்கூடும் என்று கூறினார்.
கூடுதலாக, அதிக வெப்பநிலையில் சமைப்பதை புற்றுநோயுடன் தொடர்புபடுத்தினாலும், அந்த கெமிக்கல் நிறைந்த உணவுகளை நீண்ட காலமாக அந்நபர் உட்கொண்டிருக்க வேண்டும். அதாவது புற்றுநோயானது சிறிது கார்சினோஜென்களை உட்கொண்டால் ஏற்படாது. இந்த கார்சினோஜென்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் புற்றுநோய் ஏற்படும். ஆகவே அந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
தவா சப்பாத்தி Vs நெருப்பில் சுட்ட சப்பாத்தி - அவற்றில் எது சிறந்தது?
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் தவா சப்பாத்தி Vs நெருப்பில் சுட்ட சப்பாத்தியில், எது சிறந்தது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுவது என்னவெனில், முந்தைய காலத்தில் சப்பாத்தியானது தவாவில் துணியைப் பயன்படுத்தி அழுத்தி செய்யப்பட்டது. இப்படி தவாவில் சப்பாத்தி சுடுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் தற்போது உயர் நெருப்பில் சப்பாத்தியை சுடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த வகை சப்பாத்தி விரைவில் செய்யக்கூடியது.
ஆனால் நெருப்பில் சப்பாத்தியை சுடும் போது ஒருசிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் சப்பாத்தியின் அனைத்து முனைகளும் ஒரே மாதிரி வெந்திருக்காது. நெருப்பில் சுடும் போது சில பகுதி கருக வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போது அனைவரது வீட்டிலும் கேஸ் தான் உள்ளது. இந்த கேஸை ஆன் செய்து, அதில் சப்பாத்தியை நேரடியாக சுடும் போது, சிலிண்டரில் உள்ள எரிவாயு சப்பாத்தியில் சேர வாய்ப்புள்ளது. இந்த வாயுக்கள் சப்பாத்தியில் நுழைந்தால், உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும்.
சப்பாத்தியை ஏன் தோசைக்கல்லில் சமைக்க வேண்டும்?
* தோசைக்கல் அல்லது தவாவில் சப்பாத்தியைசுடும் போது, சப்பாத்தியின் அனைத்து பகுதிகளுக்கும் வெப்பம் ஒரே சீரான அளவில் பரவும். இதன் விளைவாக சப்பாத்தி சீராக வெந்து இருக்கும்.
* தவாவில் சப்பாத்தியை சுடும் போது, சப்பாத்தியில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை நிலைத்திருக்கும். சப்பாத்தி உயர் வெப்பநிலையில் சமைக்கப்படாததால், அதில் உள்ள சத்துக்கள் மாறாமல் அல்லது அழியாமல் அப்படியே இருக்கும்.
* தோசைக்கல் அல்லது தவாவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சப்பாத்தியை சுடும் போது, கொழுப்புக்கள் அதிகமாக இருக்கும் என்பதில்லை. சொல்லப்போனால் எண்ணெயை தடவும் போது, சப்பாத்தி தவாவில் ஒட்டிக் கொள்ளாமல் அல்லது கருகிப் போகாமல், வேகமாக சப்பாத்தியை சமைக்க செய்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications