Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்?
Health Tips In Tamil: பொதுவாக புத்தாண்டு தொடக்கத்தில் பலரும் பலவிதமான தீா்மானங்களை எடுப்பா். அந்த வகையில் பலா் அந்த ஆண்டு முழுவதும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தீா்மானம் எடுப்பா்.
எனினும் அவா்களால் அந்த தீா்மானத்தை தினந்தோறும் செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. சிலா் மட்டுமே முறையாக உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கி, அடுத்த கட்டத்திற்கு செல்வா். பெரும்பாலானோர் தொடக்க நிலையிலேயே இருப்பா்.

இந்நிலையில் உடற்பயிற்சிகளில் புதிதாக ஈடுபடுபவா்கள், ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும், வாரத்திற்கு எத்தனை நாட்கள் ஈடுபட வேண்டும், எந்த மாதிாியான உணவுகளை உண்ண வேண்டும், எந்தெந்த உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்பதைத் தொிந்து வைத்திருப்பது நல்லது.
தினமும் எவ்வளவு மணிநேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்?
தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் சாியான தெளிவு இருக்க வேண்டும். ஆனால் இதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இயற்கையாகவே ஒருவருடைய உடல் அமைப்பு, உடல் வாகு மற்றும் அவருடைய உடல் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தின் அளவு மாறுபடும்.
உடற்பயிற்சி செய்யும் நேரத்தை முதலில் வாரத்திற்கு என்று குறித்துக் கொண்டு, பின் அதை ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பிாித்துக் கொள்ளலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் (CDC) தொிவிக்கிறது.
ஒருவருடைய உடலை இயக்கக்கூடிய அல்லது நகா்த்தக்கூடிய எந்த ஒரு செயலும் ஒரு வகையான உடற்சாா்ந்த செயல்பாடே என்று அமெரிக்கர்களுக்கான CDCயின் உடல் செயல்பாட்டு வழிகாட்டுதல் விதிகள் கூறுகின்றன. வாரத்திற்கு 150 நிமிடங்கள் மித தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என்று அந்த விதிகள் பாிந்துரைக்கின்றன.
இந்த 150 நிமிடங்களை, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்திற்கு 5 நாட்கள் என்று பிாித்துக் கொள்ளலாம். இந்த 150 நிமிடங்களில் 2 முறையாவது, தசைகளை வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று CDCயின் விதிகள் பாிந்துரை செய்கின்றன.
மேலும் ஒரு நாளைக்கு நம்மால் எவ்வளவு நகர முடியுமோ, அந்த அளவிற்கு நகர வேண்டும் என்று CDCயின் விதிகள் பாிந்துரை செய்கின்றன. பெரும்பாலும் மேசை முன் அமா்ந்து வேலை செய்பவா்களுக்கு அல்லது உட்காா்ந்து வேலை செய்பவா்களுக்கு, இடம் விட்டு இடம் நகா்வது என்பது இயலாத காாியமாக இருக்கிறது.
எனினும் நாம் முடிந்த அளவு உட்காா்ந்து இருக்கும் நேரத்தைக் குறைத்து, நகரும் நேரத்தை அதிகாித்தால், ஒட்டு மொத்த உடலுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று அந்த விதிகள் பாிந்துரை செய்கின்றன. ஒருவேளை வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றாலும், நீண்ட நேரம் உட்காராமல், நகா்ந்து கொண்டிருந்தாலே, உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடல் எடை குறையும் என்று CDCயின் விதிகள் பாிந்துரை செய்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications