Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
விளையாடும் போது அடிபட்டு விட்டதா? காயங்கள் விரைவில் குணமாக.. இப்படி செய்யுங்க சீக்கிரம் குணமாகும்...
Health Tips In Tamil: விளையாட்டு வீரர்கள் அல்லது குழந்தைகள் விளையாடும் போது அடிபடுவது சகஜமான ஒன்று தான். இருப்பினும் இந்த விளையாட்டு காயங்களை நீங்கள் சரிவர கவனிக்காமல் விடும் போது அவை மிகப்பெரிய பிரச்சினையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவே விளையாட்டு காயங்களை சீக்கிரமே குணப்படுத்த சில வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகிறது.
பெரும்பாலான விளையாட்டு காயங்கள் அதுவாகவே குணமாகி விடும். சில காயங்கள் குணமாக நிறைய நேரங்கள் எடுக்கலாம். சில காயங்கள் உங்களுக்கு தொற்றுநோய் உணர்வை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் விளையாட்டு காயங்களை உடனடியாக குணப்படுத்த விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எளிய இயற்கை வழிகளை பின்பற்றலாம்.

நிறைய புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
காயங்களை விரைவில் குணப்படுத்துவதில் புரோட்டீன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் தசையில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த முடியும். ஏனெனில் புரதங்கள் தான் தசைக் கட்டமைப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நீங்கள் புரத உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தசை வலிமையை அதிகரிக்க முடியும். எனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள்.
நீரேற்றத்துடன் இருங்கள்
நீங்கள் வார்ம் அப் செய்யும் போதும் சரி உடற்பயிற்சி செய்யும் போதும் சரி நீரேற்றமாக உங்களை வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இது உங்களை காயங்களில் இருந்து விரைவில் மீட்டெடுக்க உதவி செய்யும். தண்ணீரில் நிறைய எலக்ட்ரோலைட்டுகள் காணப்படுகிறது. இது உங்களை காயங்களில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது. காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது.
போதுமான தூக்கம் என்பது அவசியம்
விளையாட்டு காயங்கள் ஏற்படும் போது போதுமான ஓய்வு என்பது மிகவும் அவசியம். போதுமான தூக்கம் இருப்பது உங்கள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. காயங்கள் குணமாக ஊட்டச்சத்தை விட போதுமான தூக்கம் என்பது அவசியம். எனவே குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். முடிந்த வரை அதிக தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
காயங்களை குணப்படுத்த சரியான வெப்பநிலை தேவை
விளையாட்டு காயங்களை குணப்படுத்த சரியான வெப்பநிலையை பயன்படுத்த வேண்டும். வெப்பமான மற்றும் குளிர்ந்த நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும். வெப்ப ஒத்தடம் கொடுக்கும் போது காயமடைந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது காயத்தை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. சூடான அல்லது குளிரை பயன்படுத்துவது விளையாட்டு காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இது உங்கள் காயங்களை சரி செய்ய உதவுகிறது.
மருத்துவரை அணுகலாம்
காயங்கள் குணமாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். தசைநார் கிழிசல் அல்லது மூட்டுக்கு சிகிச்சை என்றால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.
உங்கள் மனநிலை ஆரோக்கியமும் அவசியம்
உடல் காயங்கள் ஒருவரின் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கிறது. உங்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றவை உங்கள் காயங்கள் குணமாகுவதை தாமதப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் காயங்கள் குணமாக மன ஆரோக்கியத்தை கவனிப்பது மிகவும் அவசியம். எனவே நேர்மறை எண்ணங்களை வளர்த்து உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
நிறை புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உங்கள் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. துத்தநாகம், கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவி செய்யும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குணமாக்கும் செயல்திறனில் வேலை செய்கிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் நீங்கள் சீக்கிரமே காயங்கள் குணமாகி விளையாட்டு பயிற்சியில் ஈடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
