Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தினமும் 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பதால் பெறும் நன்மைகள்!
சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அதற்கு பணம் தேவை. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக அல்லும் பகலும் நாம் அயராது உழைத்து வருகிறோம். அதில் பலர் தூரத்தை சற்றும் பொருட்படுத்தாமல் பல மணிநேரங்கள் பஸ், ரயில் போன்றவற்றில் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்கிறார்கள்.
அப்படி பயணம் செய்யும் போது, நிறைய பேர் உட்கார கூட சீட் கிடைக்காமல், நின்று கொண்டு சென்று வருவதுண்டு. இவ்வாறு நின்று கொண்டே பல மணிநேரங்கள் பயணம் செய்பவர்கள், தினமும் கடுமையான கால் வலியை சந்திப்பதுண்டு, அதோடு மிகுந்த சோர்வையும் அனுபவிக்கக்கூடும்.

இப்படி ஒருபுறம் இருக்க, அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளு மற்றும் இலக்கு காரணமாக பலவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, மிகுந்த டென்சனை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், அதன் காரணமாகவே பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆனால் தினமும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், பலவிதமான நன்மைகளைப் பெறலாம். கீழே வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
பாத சோர்வு நீங்கும்
நீண்ட நேரம் தினமும் பயணத்தை மேற்கொள்பவர்கள், பாதங்களில் கடுமையான வலி மற்றும் சோர்வை சந்திக்கக்கூடும். இப்படி சந்திக்கும் வலி மற்றும் சோர்வை நீக்க, ஒரு அகலமான பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது எப்சம் உப்பை சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், கால்களில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், கால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும், டென்சனில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் வீக்கம் குறையும்.
மன அழுத்தம் குறையும்
நமது பாதங்கள் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் மற்றும் நரம்பு முனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. இத்தகைய பாதங்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கும் போது, பாதங்களில் உள்ள அழுத்தப் புள்ளிகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த உடலும் ரிலாக்ஸாக இருக்கும். எனவே இனிமேல் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்தால், வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வையுங்கள்.
இரத்த ஓட்டம் மேம்படும்
உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வையுங்கள். இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதுவும் சர்க்கரை நோயாளிகள், ஆர்த்ரிடிஸ் அல்லது புற தமனி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு செய்வது மிகவும் நல்லது.
ஆற்றல் ஓட்டம் மேம்படும்
வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பதால், உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, ஆற்றல் ஓட்டமும் மேம்படுகிறது. பொதுவாக உடலில் தசைகள் கடினமாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் தசைகள் தளர்ந்தால், அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் ஆற்றலை பராமரிக்க உதவும்.
நல்ல தூக்கத்தைப் பெற உதவும்
இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வையுங்கள். இதனால் பாதங்களில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் மேம்பட்டு, உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் உணர்வை தந்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. முக்கியமாக பாதங்களை நீரில் ஊற வைக்கும் போது, உடல் வெப்பநிலை குறைந்து, விரைவில் ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.
பாதங்களை ஊற வைக்கும் முறை:
* முதலில் ஒரு அகலமான டப்பை எடுத்து, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நிரப்ப வேண்டும். முக்கியமாக நீர் மிகவும் சூடாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டுவிடும்.
* பின் அந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை சேர்த்து கலந்து, வேண்டுமானால் நறுமண எண்ணெயை சிறிது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இன்னும் நற்பலன் கிடைக்கும்.
* பின்பு பாதங்களை அந்நீரில் 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் ஆனதும், பாதங்களை வெளியே எடுத்து உலர்த்தி, பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications