Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உங்க கிச்சனில் இந்த 3 பொருட்கள் இருந்தா.. உடனே தூக்கி போடுங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Toxic Kitchen Items: நம் உடல் ஆரோக்கியமானது நாம் உண்ணும் உணவுகளால் மட்டுமின்றி, வேறு பல காரணிகளாலும் பாதிக்கப்படும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இல்லை தானே. ஆனால் அது உண்மையே.
நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் நாம் சமைக்க பயன்படுத்தும் ஒருசில பொருட்கள் நம் ஆரோக்கியத்தை நினைத்து பார்க்க முடியாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சமீபத்தில் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டு எய்ம்ஸ்-ல் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடனே தூக்கி எறிய வேண்டிய சமையலறையில் உள்ள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் 3 விதமான ஆபத்தான கிச்சன் பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பொருட்கள் எவையென்பதையும், எதனால் தூக்கி எறிய வேண்டும் என்பதையும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
1. பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள்
சமையலறையில் பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள் இருந்தால், அவற்றை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள் காலப்போக்கில் சிதைந்துவிடுவதோடு, அதிக வெப்பத்திற்கு வெளிப்படும் போது BPA (bisphenol A) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடும். எனவே இந்த பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்களுக்கு பதிலாக துருப்பிடிக்காத ஸ்டீல், சிலிகான் அல்லது மூங்கில் போன்ற பாதுகாப்பான சமையல் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
2. பிளாஸ்டிக் காய்கறி வெட்டும் பலகைகள்
பிளாஸ்டிக்கால ஆன காய்கறி வெட்டும் பலகைகள் காலப்போக்கில் சிதைவதோடு, அவற்றில் காய்கறிகளை வெட்டும் போது, உணவுகளில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் வெளியிடப்பட்டு, உடலினுள் சென்று தீங்கை விளைவிக்கும். எனவே இந்த பிளாஸ்டிக் பலகைகளுக்கு பதிலாக, மரப்பலகைகள் அல்லது கண்ணாடி பலகைகளை பயன்படுத்துங்கள்.
3. கீறல்களைக் கொண்ட நாண்ஸ்டிக் பேன்கள்
தற்போது அனைவரது வீட்டிலும் நாண்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நாண்ஸ்டிக் பாத்திரங்களில் அதிக கீறல்கள் இருந்தால், அவற்றை தூக்கிஎறிந்துவிட வேண்டும். கீறல்களைக் கொண்ட சேதமடைந்த நாண்ஸ்டிக் பாத்திரங்களில் பெரும்பாலும் PFAS (perfluoroalkyl மற்றும் polyfluoroalkyl பொருட்கள்) இருக்கும்.
இவை உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இனப்பெருக்க பிரச்சனைகள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த பாத்திரங்களை யோசிக்காமல் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். இதற்கு பதிலாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், இரும்பு அல்லது பீங்கான் பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
என்ன நண்பர்களே! உங்கள் வீட்டு சமையலறையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், மோசமான பின்விளைவுகளை சந்தித்து, மிகுந்த அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
