Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஆண்களே! உங்களிடம் இந்த பழக்கம் இருக்கா? அப்ப உங்க ஆணுறுப்பின் அளவு குறைஞ்சிக்கிட்டே வருமாம்!
நம் அன்றாட பழக்கவழக்கங்கள் நம் உடல் ஆரோக்கியத்தோடும், பாலியல் ஆரோக்கியத்தோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இந்நிலையில், உங்களிடம் இருக்கும் சில பழக்கவழக்கங்கள் விஷயங்களை மிகவும் மோசமாக்க வாய்ப்புள்ளது.
உங்கள் ஆணுறுப்பின் ஆரோக்கியம் உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஆனால், உங்களின் சில தவறான பழக்கங்களால் உங்கள் ஆணுறுப்பின் அளவு சுருங்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஆணுறுப்பின் அளவு சுருங்கமால் இருக்கவும், ஆண்குறி அளவு பெரிதாக்க நீங்கள் என்ன செய்யலாம்.

என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். சிறந்த பாலியல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் சில பழக்கங்களை முற்றிலும் கைவிட வேண்டும்.
போதுமான அளவு உடல் செயல்பாடு இல்லை
உடல் செயல்பாடு இல்லாமல் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்நிலையில், போதுமான உடல் செயல்பாடு இல்லையென்றால், உங்க ஆணுறுப்பின் அளவு குறையும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் அதிக உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் பாலியல் செயல்பாடுகள் மேம்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக உடற்பயிற்சி செய்வது ஆண்குறி வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் உறுப்புக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் மற்றும் இரத்த நாளங்களைத் திறக்கலாம்.
பற்களை சுத்தமாக வைத்திருப்பதில்லை
பல் துலக்காமல் இருப்பதால் மட்டும் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்றல்ல. ஜர்னல் ஆஃப் பெரியோடோன்டாலஜியின் ஆராய்ச்சியாளர்கள், விறைப்புத்தன்மை பிரச்சனை கொண்ட ஆண்களுக்கு ஈறு நோய் 7 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஈறு திசுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் உடல் முழுவதும் நகர்ந்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உங்கள் ஆண்குறியில் உள்ள இரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது எனத் தெரிவிக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல்
அதிக எடையுடன் இருப்பது மற்றும் துரித உணவு போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவில் உட்கொள்வது, ஆண்குறியின் அளவை அதிகம் பாதிக்கும். 2011 ஹார்வர்ட் ஆய்வின்படி, சீரான உணவைப் பராமரிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை விட, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவறாமல் உட்கொண்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உடல் பருமனைத் தவிர்க்க சத்தான உணவைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இது உங்கள் எடை மற்றும் இடுப்பு அளவுகள் உயரும்போது உங்கள் ஆணுறுப்பின் அளவு சுருங்குவதற்கு வழிவகுக்கும்.
அதிகமாக புகைபிடித்தல்
புகைபிடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, உங்கள் ஆண்குறியின் அளவைக் கணிசமாகக் குறைக்கும். சிகரெட் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும், இது விறைப்பு செயலிழப்பு மற்றும் ஆண்குறி திசுக்களுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும், புகைபிடித்தல் இருதய நிலைகளுடன் தொடர்புடையது என்பதால், ஆண்குறி உட்பட பல உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆணுறுப்பு அளவு சுருங்கலாம்.
பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுவதில்லை
நீண்ட, ஆரோக்கியமான ஆணுறுப்புக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் இரத்த நாளங்களில் உருவாகி உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகின்றன. 2008 ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழக ஆய்வின்படி, தர்பூசணி சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது என்று கூறியது. தர்பூசணியில் உள்ள சிட்ருலின்-அர்ஜினைன் என்ற கலவை ஆண்களின் விறைப்புத்தன்மையை தடுக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


