Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
வேகமாக பரவி வரும் H3N2: இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதையா இருங்க...
H3N2 வைரஸ் தொற்றால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். எனவே இந்த தொற்றின் அறிகுறி தெரிந்தால், உடனே சுய மருத்துவத்தை மேற்கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
H3N2 Virus Influenza: தற்போது இந்தியாவில் H3N2 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறாவிட்டாலும், இந்த வைரஸால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு செல்வதைக் காண முடிகிறது. குறிப்பாக இந்த H3N2 வைரஸ் தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர இணை நோய்களைக் கொண்டவர்கள் மற்றும் முதியவர்களும் H3N2 வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏனெனில் இவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக உள்ளன. அதோடு இந்த H3N2 வைரஸ் தொற்றால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். எனவே இந்த தொற்றின் அறிகுறி தெரிந்தால், உடனே சுய மருத்துவத்தை மேற்கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அறிகுறிகள் தீவிரமாகி, அவதிப்படக்கூடும். கீழே H3N2 வைரஸ் தொற்றின் புறக்கணிக்கக்கூடாத சில முக்கியமான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிகப்படியான காய்ச்சல்
அறிக்கைகளின் படி, H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகப்படியான காய்ச்சலை, அதுவும் 6-7 நாட்கள் வரை நீடித்த காய்ச்சலை அனுபவித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, சில நோயாளிகள் காய்ச்சலுடன், குளிர் அல்லது உடல் நடுக்கத்தையும் சந்திக்கக்கூடும்.
தொடர்ச்சியான இருமல்
H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காய்ச்சலுடன் வந்த நோயாளிகள், காய்ச்சலைத் தவிர வறட்டு இருமலை அனுபவித்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் இந்த இருமலானது தீவிரமாக இருப்பதோடு, 10-12 நாட்கள் வரை நீடித்திருந்ததாக கூறுகின்றனர். இது தவிர சிலர் இருமலுடன் தொண்டைப்புண்ணையும் அனுபவித்ததாக புகாரளித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிமோனியா
சில சமயங்களில் H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளின் உடலில் வைரஸானது நுரையீரல் வரை பரவி, நிமோனியாவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள காற்றுப்பைகளிள் தொற்று காரணமாக வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டுள்ள நிலையாகும். இந்த அழற்சியால் காற்றுப்பைகளில் சீழ் அல்லது திரவங்கள் நிரப்பப்பட்டு, அதன் விளைவாக காய்ச்சல், இருமல், குளிர் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
உடல் பலவீனம்
H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மிகுந்த சோர்வு, களைப்பு மற்றும் உடல் பலவீனத்தை சந்திக்கக்கூடும். அதுவும் இந்த அறிகுறிகள் பல வாரங்களாக நீடித்து, அதைத் தொடர்ந்து மற்ற காய்ச்சல், இருமல் அறிகுறிகளை அனுபவித்தால், அவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதோடு, அளவுக்கு அதிகமான உடல் வலி, முதுகு வலி, கால் வலி போன்றவற்றையும் சந்தித்தால், அதையும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருந்தால் அல்லது தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

