Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குருகிராம் உணவகத்தில் மௌத் ப்ரெஷ்னரை சாப்பிட்டு இரத்த வாந்தி எடுத்த 5 பேர்.. ஏன்? என்ன காரணம்?
Gurugram Cafe Mouth Freshener Dry Ice Case: சமீபத்தில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குருகிராமில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்கு பின் மௌத் ப்ரெஷ்னரை சாப்பிட்ட 5 பேர் இரத்த வாந்தியுடன், நாக்கில் வெட்டுக்காயங்கள் மற்றும் கடுமையான வாய் எரிச்சலை சந்தித்துள்ளனர்.
இவர்களது நிலைமை மோசமானதால் அவர்கள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், இவர்கள் சாப்பிட்டது மௌத் ப்ரெஷ்னர் அல்ல, அது ஒரு உலர் பனி (Dry Ice) என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தான் இவர்களுக்கு வாயில் கடுமையான எரிச்சலுடன் இரத்த வாந்தியும் எடுத்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. சரி, உலர் பனி என்றால் என்ன? அதை சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து காண்போம்.
உலர் பனி என்றால் என்ன?
உலர் பனி என்பது கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) திட வடிவம். இது பொதுவாக பார்ட்டிகளில் ஒரு வியத்தகு மூடுபனி விளைவுகளை உருவாக்குவதற்கும், உணவைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலர் பனியை எதிர்பாராமல் உட்கொள்ள நேர்ந்தால், அதன் விளைவாக மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?
உலர் பனியை உட்கொண்டதும் வாய் மற்றும் தொண்டை பகுதியில் கடுமையான எரிச்சலை சந்திக்க நேரிடும். இதற்கு உலர் பனியின் மிகவும் குளிர்ச்சியான வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இந்த உலர் பனியுடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது (உட்கொள்ளும் போது), அது உட்புற திசுக்களை உறைய வைக்கும்.
மேலும் இந்த உலர் பனி உடலுக்குள் சென்றதும் அது வாயுவாக மாறி, வயிற்று வலி, வீக்கம் மற்றும் கடுமையான அசௌகரியத்திற்கு வழிவகுத்து, இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அது நாம் நினைக்கும் அளவில் லேசான பாதிப்பை ஏற்படுத்தாமல், மிகவும் ஆபத்தான அளவில் உள்ளுறுப்புக்களை சேதப்படுத்தும்.
அதுவும் வயிறு மற்றும் குடலில் துளையிடும் அளவில் நிலைமையை மோசமாக்கும்.மேலும் இந்த CO2 வாயுவை சுவாசித்தால், அது சுவாசிப்பதில் சிரமத்தையும், இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியையும், சில சமயங்களில் சுயநினைவை இழக்கவும் தூண்டும்.
உலர் பனி எங்கே பயன்படுத்தப்படுகிறது?
உலர் பனி ஒரு குளிரூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் இது உணவுத் துறை முதல் மருத்துவ துறை வரை இதன் தேவை அதிகமாக உள்ளது. உதாரணமாக, இந்த உலர் பனி உணவுத் துறையில் உணவுகள் விரைவில் கெட்டுக் போகாமல் பாதுகாப்பதற்கும், மருத்துவ துறையில் தடுப்பூசி மருந்துகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், மேலும் திரைப்பட படப்பிடிப்புகளில் மேகங்கள் மற்றும் மூடுபனியின் விளைவைக் கொடுக்க உலர் பனி பயன்படுத்தப்படுகிறது.
எவ்வளவு ஆபத்தானது?
உலர் பனி என்பது கார்பன்-டை-ஆக்சைடின் திட வடிவமாகும். இந்த உலர் பனியை உட்கொண்டால், கடுமையான குளிர்ச்சியின் காரணமாக உடலினுள் உள்ள செல்கள் இறக்கத் தொடங்கும். அதனால் தான் இதை வெறும் கையில் தொட தடைசெய்யப்பட்டுள்ளது.
உலர் பனி எப்படி தயாரிக்கப்படுகிறது?
உலர் பனியை உருவாக்க, முதலில் கார்பன்-டை-ஆக்சைடு 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குளிரூட்டப்பட்டு அழுத்தப்படுகிறது, இதன் காரணமாக இந்த வாயு பனிக்கட்டி வடிவத்தை எடுக்கும். அதற்குப் பின், அது சிறிய அல்லது பெரிய துண்டுகளாக வெட்டப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











