Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
புனேவில் 59 பேருக்கு அரிய வகை நரம்பியல் பாதிப்பு: இது எதனால் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன?
Guillain-Barré Syndrome Outbreak In Pune: புனேவில் தற்போது குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்பால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் என மொத்தம் 59 பேர் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 12 பேர் மருத்துவமனையில் வென்டிலேட்டர்களில் உள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி பலவீனப்படுதன் மூலம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கோளாறு பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே பரவலாக இருக்கும். ஆயினும், இது ஒரு தொற்றுநோய் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது புனேவில் அதிகரித்து வரும் குய்லின்-பார் சிண்ட்ரோம் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, இது எப்படிப்பட்ட பாதிப்பை ஒருவருக்கு ஏற்படும் என்பது குறித்து காண்போம்.
குய்லின்-பார் சிண்ட்ரோம் என்றால் என்ன?
குய்லின்-பார் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும். இது அரிய நரம்பியல் கோளாறு ஆகும். இந்த நிலையில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இந்த கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தலை பலவீனம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். தீவிரமாகும் போது, இது பக்கவாதத்தை உண்டாக்கலாம்.
குய்லின்-பார் சிண்ட்ரோம் யாருக்கு வரும் அபாயம் உள்ளது?
குய்லின்-பார் சிண்ட்ரோம் எந்த வயதினருக்கும் வரலாம். இருப்பினும் இந்த கோளாறு பொதுவாக 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும். என்ன தான் குய்லின்-பார் சிண்ட்ரோம் அரிதானது என்றாலும், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
குய்லின்-பார் சிண்ட்ரோம் அறிகுறிகள்
குய்லின்-பார் சிண்ட்ரோம் புற நரம்புகளை பாதிக்கும் நிலையாகும். இதன் முதன் அறிகுறி தசை பலவீனம் மற்றும் கூச்ச உணர்வு. இந்த அறிகுறிகளானது திடீரென்று தோன்றும். அதுவும் இந்த பாதிப்பு உடலின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மற்றும் இது கால்களில் தொடங்கி கைகள், முகம் வரை பரவும். இந்த பாதிப்பு ஏற்பட்டால், அது நடப்பதைக் கூட கடினமாக்கலாம்.
குய்லின்-பார் சிண்ட்ரோம்-ன் அறிகுறி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, மற்ற அறிகுறிகள் தெரியலாம்: அவை பின்வருமாறு:
* முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி
* பக்கவாதம்
* மார்பு தசை பலவீனமாகி, சுவாசிப்பது கடினமாக இருக்கலாம்.
* பேசுவது மற்றும் விழுங்குவதில் சிரமம்
* பார்வை பிரச்சனைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் சில நாட்கள் வரை நீடித்து மோசமாகிவிட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் பிரச்சனைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும் சில சிகிச்சைகளின் மூலம் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கலாம். இதனால் சில வாரங்கள் முதல் சில ஆண்டுகளில் மீண்டு வரலாம்.
எதனால் ஏற்படுகிறது?
குய்லின்-பார் சிண்ட்ரோம் ஏற்பட முக்கிய காரணம் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி ஆகும். கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்பது ஒரு சுழல் வடிவ பாக்டீரியாவாகும். இது உலகளவில் உணவு மூலம் பரவும் இரைப்பை குடல் அழற்சிக்கு முக்கிய காரணமாகும். இது பொதுவாக விலங்குகளின் குடலில், குறிப்பாக கோழிப்பண்ணையில் காணப்படுகிறது. மேலும் அசுத்தமான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சி, பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்கள் அல்லது சுத்திகரிக்கப்படாத நீரை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications