Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Benefits Of Guava Leaves Juice In Tamil: ஆப்பிளுக்கு இணையான சத்தைக் கொண்ட, அதே சமயம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம் தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதேப் போல் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால், இன்னும் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா?
ஆம், கொய்யா இலைகளில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன. மேலும் இந்த இலைகளில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளதால், இந்த இலையின் சாற்றினை உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதுவும் இந்த இலையின் சாற்றினை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது எண்ணற்றல் மாற்றங்களை உடலில் காணலாம். இப்போது கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால் பெறும் பயன்கள் என்னவென்பதைக் காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கொய்யா இலை சாறு குடிப்பதால் கிடைக்கும் முதல் நன்மை என்றால் அது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகும். இந்த இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவி, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும். முக்கியமாக இந்த இலையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், இந்த இலையின் சாற்றினை குடிப்பது நல்லது.
செரிமானம் மேம்படும்
கொய்யா இலையின் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவும். இந்த இலைகளின் டானின்கள் அதிகம் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கின்றன. எனவே செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள், கொய்யா இலைசாற்றினைக் குடித்து வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அதிகம் சிரமப்படாமல் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் உடலில் உள்ள அதிகப்படியான எடையை கொய்யா இலை சாறு உதவும். எப்படியெனில் இந்த இலைச்சாறு உடலின் மெட்டபாலிச விகிதத்தை சீராக்கும் மற்றும் கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறையை மேம்படுத்தும். கூடுதலாக கொய்யா இலைகளில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால், இந்த சாற்றினைக் குடிக்கும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும்.
சருமத்திற்கு நல்லது
கொய்யா இலைகளின் சாறு வெறும் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவது மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எப்படியெனில் கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து கொய்யா இலை சாற்றினை குடித்து வந்தால், அது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும், முகப்பருவைக் குறைக்கும் மற்றும் சருமத்தின் பொலிவை மேம்படுத்தும். கூடுதலாக, கொய்யா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கும்.
இரத்த சர்க்கரை சீராகும்
முக்கியமாக கொய்யா இலை சாறு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. கொய்யா இலைகளில் உள்ள கலவைகள் இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குவதாக ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதுவும் தினமும் காலையில் கொய்யா இலை சாற்றினை குடித்து வந்தால், அது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுவதோடு, உடல் சோர்வு மற்றும் சர்க்கரை உணவுகளின் மீதான நாட்டத்தையும் குறைக்கும்.
எனவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய கொய்யா இலை சாற்றினை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக இந்த சாற்றினைக் குடிக்கும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
