Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம்
தொடர்ந்து 2 வாரம் முட்டை சாப்பிடுவதால் உடலுக்குள் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
Eggs Benefits In Tamil: மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் முக்கியமான சத்து. இது உடலில் பல்வேறு முக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக இது திசுக்களை சரிசெய்யவும், தசைகள், எலும்புகள், தலைமுடி, சருமம், நகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உருவாக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
இந்த புரோட்டீன் பல்வேறு உணவுகளில் காணப்பட்டாலும், முட்டையில் தான் நல்ல தரமான புரோட்டீன் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட புரோட்டீனை தினமும் ஒருவர் பெற வேண்டியது முக்கியம். ஏனெனில் தினமும் ஒருவர் போதுமான புரோட்டீனை பெற்றால் தான் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் சிறப்பாகவும் இருக்கும்.

இப்படிப்பட்ட புரோட்டீன் நிறைந்த முட்டையை தினமும் உட்கொள்வது நல்லது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இந்த முட்டையை தினமும் ஒன்று என தொடர்ந்து 2 வாரங்கள் உட்கொண்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, முழு முட்டையிலும் புரோட்டீன் நிறைந்திருப்பதால், இது முட்டையை மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக ஆக்குகிறது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் 2.5 கிராம் புரோட்டீன் உள்ளது. அதே வேளையில் வெள்ளைக்கருவில் 4 கிராம் புரோட்டீனும் உள்ளது. அதுவும் இந்த புரோட்டீன் உயர்தர புரோட்டீன் என்றும் கூறினார். அதோடு முட்டைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அது உடலுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் பட்டியலிட்டார்.
1. கண்களுக்கு நல்லது
முட்டைகள் கண்களை பாதுகாக்கும் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளின் அபாயங்களைத் தடுக்கும் சத்துக்களைக் கொண்டது. "முட்டையை தினமும் உட்கொள்ளும் போது, அது மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன" என்று டாக்டர் கூறினார்.
2. மூளை மற்றும் கல்லீரலுக்கு நல்லது
முட்டையில் கோலின் அதிகமாக உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது கொழுப்பு கல்லீரல் நோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது என்று டாக்டர் கூறினார். சமீப காலமாக கொழுப்பு கல்லீரல் நோயால் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த கொழுப்பு கல்லீரல் நோய் வரக்கூடாதெனில், முட்டையை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அதோடு தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் முட்டையை தினமும் உட்கொண்டு வரும் போது, அது அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
3. நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்
முட்டை மற்றும் கொழுப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உள்ளன. அதில் பெரும்பாலானோரின் மனதில் இருப்பது முட்டை கொழுப்புக்களை அதிகரிக்குமா என்பது தான். ஆனால் ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடாதெனில், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். "முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ளது. எனவே முட்டையை தினமும் உட்கொள்ளும் போது, அது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
4. இரத்த சர்க்கரை கட்டுப்படும், ஆற்றல் அதிகரிக்கும்
முட்டையை காலை உணவாக எடுக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குகிறது என்று டாக்டர் கூறினார்.
சிறந்த சைவ புரோட்டீன் உணவு
அசைவ உணவாளர்களுக்கு முட்டை சிறந்த புரோட்டீன் உணவாக இருக்கும் அதே வேளையில், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த புரோட்டீன் உணவு என்றால் அது டோஃபு என்றும் டாக்டர் சேத்தி கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications