Latest Updates
-
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம்
நைட் டைம்-ல 'சுச்சூ' அதிகமா வருதா? அப்ப உங்க உடம்புல இந்த கொடிய நோய் இருக்க வாய்ப்பிருக்கு... உஷார்..
Frequent Urination At Night: அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம் தான். ஏனெனில் சிறுநீர் கழிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறிவிடும். இதன் விளைவாக உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் ஒருவருக்கு இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுகிறது என்றால், அதற்கு உடலில் உள்ள ஏதோ ஒரு தீவிர பிரச்சனை காரணமாக இருக்கலாம். இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை மருத்துவ ரீதியாக நோக்டூரியா என்று அழைப்பர். இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பிரச்சனை.

இந்த பிரச்சனையைக் கொண்டவர்களால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். ஒரு இரவில் ஒருவர் 1-2 முறை சிறுநீர் கழிக்க எழுந்திரிப்பது என்பது பிரச்சனை அல்ல. ஆனால் அதற்கும் மேலாக எழுந்தால், அது உடலில் ஒரு ஆபத்தான நோய் உள்ளது என்பதன் அறிகுறி. இப்போது இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீரைக் கழிக்கத் தூண்டும் அந்த ஆபத்தான நோய்கள் என்னவென்பதைக் காண்போம்.
சர்க்கரை நோய் (Diabetes)
ஒருவர் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள் என்றால், முதலில் அவருக்கு சர்க்கரை நோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் சர்க்கரை நோயின் முதன்மையான சில அறிகுறிகளுள் இதுவும் ஒன்று. குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
ஏனெனில் சிறுநீரகங்களானது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற அயராது வேலை செய்து, சிறுநீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் இரவு நேரத்தில் இந்த பிரச்சனையை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெறுங்கள்.
சிறுநீர் பாதை தொற்று (UTI)
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால், அதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்கலாம். UTI என்பது சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய் வழியாக நுழைந்து, அங்கு பெருக்கமடையும் போது ஏற்படும் நிலையாகும்.
இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், முதலில் அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடுவதோடு, வலி அல்லது எரிச்சலுணர்வை சந்திக்க நேரிடும். மேலும் இத்தொற்று ஏற்பட்டவர்களின் சிறுநீர் சற்று மங்கலாக மேகமூட்டத்துடன் மற்றும் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும் இந்த UTI-க்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், சிறுநீரக தொற்றுகள் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துவிடும்.
சிறுநீர்ப்பை அதிவேகமாக செயல்படுவது (Overactive Bladder)
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதுவும் இந்த பிரச்சனையைக் கொண்டவர்களுள் சிலர் அடிக்கடி அவசரமாக சிறுநீர் வருவதை உணர்வார்கள். அதில் சிலருக்கு சிறுநீர் வருவது போன்றே உணர்வு இருக்குமே தவிர, சிறுநீரை வெளியேற்றமாட்டார்கள்.
ஏனெனில் இந்த பிரச்சனையானது சிறுநீர்ப்பை தன்னிச்சையாக சுருங்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது. மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் ஒரு குறிப்பிட்ட நரம்பியல் நிலை காரணமாக ஒரு அதிகப்படியான சிறுநீர்ப்பை ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு சிகிச்சை பெறாமல் இருந்தால், ஒரு கட்டத்தில் அது மனநிலையை பாதித்து, வாழ்க்கையை மோசமாக்கிவிடும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease)
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிவதற்கான மற்றொரு காரணம் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகும். இந்த நோயில் சிறுநீரகங்கள் படிப்படியாக அதன் செயல்திறனை இழக்கும். இந்த நாள்பட்ட சிறுநீரக நோயை சரிசெய்யாமல் விட்டால், அது உடலில் திரவம் மற்றும் கழிவுப் பொருட்களை அதிகரித்து, அடிக்கடி சிறுநீரை கழிக்கத் தூண்டும். கூடுதலாக கால் வீக்கம், உடல் சோர்வு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea)
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கும் தொடர்புள்ளது. எப்படியெனில், தூங்கும் போது சுவாசம் திடீரென்று இடைநிறுத்தப்படுவதால், இரவில் விழிக்க நேரிடுகிறது.
இதன் விளைவாக இரவு நேரத்தில் விழித்திருக்கும் போது நீரைப் பருக தோன்றும். இப்படி நீரைக் குடிக்கும் போது, அது சிறுநீரை வரத் தூண்டும். மேலும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் திரவ சமநிலையை நிர்வகிக்கும் உடலின் திறனை பாதிக்கும் ஹார்மோனில் அசாதாரணங்களை சந்திக்கலாம்.
எனவே, நீங்கள் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திரிப்பவராயின், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications