Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
விமானத்தில் பயணிப்பதற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!
விமானத்தில் பறப்பது என்பது ஒரு அலாதியான அனுபவமாகும். விமானத்தில் பறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன, அதேபோல விமானத்தில் ஏறுவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் சில உள்ளன, குறிப்பாக உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உண்மைதான், விமானத்தில் பயணிப்பதற்கு முன் சில உணவுகளை சாப்பிடக்கூடாது, இல்லெயெனில் நீங்கள் சில அசௌகரியங்கள் அல்லது செரிமானப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பதிவில் நீங்கள் விமானத்தில் பயணிப்பதற்கு முன் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

காரமான உணவுகள்
காரமான உணவுகள் பெரும்பாலான மக்களுக்கு பிடித்ததாக இருக்கும், ஆனால் அவை விமானப் பயணத்தின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். காரத்தால் ஏற்படும் வெப்பம் உங்கள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். விமானத்தில் எந்த இயக்கமும் இல்லாமல் நீண்ட நேரம் இருக்கும் போது அவற்றை சாப்பிடக்கூடாது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவுகளாக இருக்கலாம, ஆனால் அவை வாயுவை உண்டாக்கக் கூடியவை. விமானத்தில், இடம் குறைவாகவும், காற்றழுத்தம் வித்தியாசமாகவும் இருக்கும் சூழலில், அவற்றை சாப்பிடும் போது வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது சங்கடமான தருணங்களைத் தவிர்க்க, விமானத்தில் ஏறுவதற்கு முன் இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள் தற்காலிக புத்துணர்ச்சியைக் கொடுக்கலாம், ஆனால் அவை வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சினையை ஏற்படுத்தும், இதனால் விமானப் பயணத்தின் போது உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். விமானத்திற்க்குள் இருக்கும் அழுத்த மாற்றங்கள் உங்கள் வயிற்றைக் குழப்பலாம்.
வறுத்த உணவுகள்
விமானப் பயணத்திற்கு முன் எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவது சோம்பலாகவும், கனமாகவும் உணர வழிவகுக்கும். வறுத்த உணவுகள் க்ரீஸ் நிறைந்தவை, மேலும் அதிலுள்ள கொழுப்பு மற்றும் உப்பு கலவை வீக்கம் அல்லது வாயுப் பிரச்சினையை ஏற்படுத்தும். அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், எனவே பயணம் செய்யும் போது அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால்
விமானத்தில் ஏறுவதற்கு முன் சில குடிமகன்கள் சில ரவுண்டுகளை குடிக்க ஆசைப்படலாம், ஆனால் மது உங்களை நீரிழப்புக்கு ஆளாக்கும். இது உங்கள் பயணத்தை மோசமாக்கும் மற்றும் உங்களுக்கு தலைச்சுற்ற வைக்கும். மேலும், மது உங்கள் தூக்க முறைகளை சீர்குலைத்து, நீங்கள் தரையிறங்கும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர வைக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் சுவையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம், ஆனால் அவை அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். விமானத்திற்குள் வறண்ட காற்றோடு இருப்பதால், அவை நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விமானப் பயணத்தின்போது சாப்பிட எளிதான சிற்றுண்டியாகத் தோன்றினாலும், அவற்றில் சோடியம் மற்றும் செயற்கைப் பொருட்கள் நிறைந்திருக்கலாம். இவை நீரிழப்பு, வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். விமானத்தின் அழுத்தத்தில், இந்த விளைவு அதிகரிக்கிறது, எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விமான பயணத்திற்க்கு முன் தவிர்ப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
