Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
குளிர்காலத்தில் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
பொதுவாக குளிர்காலத்தில் கண்களை சிறப்பாக பராமரிக்க கண்களில் கண் சொட்டு மருந்தை விடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனினும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் கண்களைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆரோக்கியமான உணவு நம்மை ஆரோக்கியமாக வாழவைக்கும் என்பது உலகறிந்த உண்மை. சமச்சீரான சத்து நிறைந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை இருந்தால் நமது உடலும் மனமும் வலிமையாக இருக்கும். அதோடு அவை நமது கண்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தற்போது பலரும் கண்கள் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பார்வைக் குறைவு, கண்களில் வறட்சி, கண்புரை, விழிப்புள்ளி குறைபாடு மற்றும் வேறுசில கண்சார்ந்த பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றனர். ஒரு பக்கம் அளவுக்கு அதிமான அழுத்தம் மற்றும் சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமையாக இருப்பது போன்றவை கண்சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. மற்றொரு பக்கம் பருவகால கண் நோய்கள் அல்லது வெளிப்புற காற்றில் நிறைந்திருக்கும் மாசுகள் போன்றவை கண்சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

கண் வறட்சி
பொதுவாக கண்சாந்த நோய்களில் முக்கியமான ஒன்று கண் வறட்சி ஆகும். கண்களில் போதுமான அளவு கண்ணீர் சுரக்காமல், அதனால் கண்களில் தேவையான அளவு உராய்வு நடக்காமல் இருந்தால் கண் வறட்சி பிரச்சினை ஏற்படும். கண்ணீரில் இருக்கும் வெப்பத்தின் அளவும் கண் உலர்தல் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. சில நேரம் கண்களை சரியாக பராமரிப்பவர்களுக்குக் கூட குறைவான ஈரப்பதம், குளிரான வெப்பநிலை மற்றும் அதிமான காற்று போன்றவை கண் வறட்சி பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. ஆகவே குளிர் காலத்தில் கண்களை சிறப்பான முறையில் பாதுகாக்க கண் சிகிச்சை நிபுணர்கள் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
பொதுவாக குளிர்காலத்தில் கண்களை சிறப்பாக பராமரிக்க கண்களில் கண் சொட்டு மருந்தை விடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனினும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் கண்களைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் குளிர்காலத்தில் கண்களை சிறப்பான முறையில் பராமரிக்கும் முக்கியமான 5 பருவகால உணவுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

நெல்லிக்காய்
வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்டிருக்கும் நெல்லிக்காய் நமது முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக நமது உடலில் இணைப்பை ஏற்படுத்தும் திசுக்கள் மற்றும் இரத்தக் குழாய்களை சீராக பராமரிப்பதன் மூலம் நமது கண் விழித்திரை சார்ந்த பிரச்சினைகளை நெல்லிக்காய் குறைக்கிறது.

ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழம் அதிமான அளவு வைட்டமின் சி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. அது நமது விழிகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் ஆரஞ்சுப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நமது கண்களில் உள்ள கண்ணீரின் அளவை அதிகரித்து, கண்களில் வறட்சி ஏற்படுவதைக் குறைக்கிறது.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் குளிர்காலத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பழமாகும். கொய்யாப் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆகவே குளிர்காலத்தில் கொய்யாப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் அது நமது கண் பார்வையை சீர்படுத்துவதோடு வயதான காலத்தில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சினைகளையும் குறைக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த சத்துகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கின்றன. பீட்டா கரோட்டீன் கண் பார்வையை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ சத்து கண் உலர்தல் சார்ந்த பிரச்சினைகளைக் குறைக்கிறது.

பாலக்கீரை (Spinach)
பாலக்கீரை குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற முக்கியமான கீரையாகும். இந்தக் கீரையில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால் அது பார்வை அளிக்கும் நரம்பு சேதமடைந்துவிடாமல் தடுக்கிறது. ஆகவே முழுமையான உடல் ஆரோக்கியம் பெறவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பாலக்கீரையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications