For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

உலகின் அனைத்து சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும். கொத்தமல்லி அதனை வாசனைக்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

|

உலகின் அனைத்து சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும். கொத்தமல்லி அதனை வாசனைக்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. கொத்தமல்லி சாதாரண உணவைக் கூட அழகான உணவாக மாற்றக்கூடிய தன்மை உடையது. கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லை அதைவிட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது.

Side Effects of Corinader Leaves

உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாப்பது, கண் ஆரோக்கியத்தை பராமரிப்பது, நச்சு உணவுகளுக்கு எதிராக போராடுவது, இதயத்தை பாதுகாப்பது என பல நன்மைகளை வழங்கினாலும் அதிகளவு கொத்தமல்லியால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் கொத்தமல்லியில் ஏற்படகூடிய பாதிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்திலோ அல்லது பால் கொடுக்கும் காலத்திலோ கொத்தமல்லி சாப்பிடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்த போதுமான தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆபத்தை தடுப்பதற்கு இந்த காலங்களில் கொத்தமல்லி சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

பெரும்பாலான தாவரங்கள் அலர்ஜிகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை, கொத்தமல்லி ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டதட்ட 32 சதவீத குழந்தைகளுக்கும், 21 சதவீத இளைஞர்களுக்கும் கொத்தமல்லியால் அலர்ஜிகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சருமத்தில் வீக்கம், உதடுகளில் புண், குமட்டல், மூச்சுத்திணறல், தலைவலி போன்றவை கொத்தமல்லியால் ஏற்படும் சில அலர்ஜிகள் ஆகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொத்தமல்லியை எடுத்துக் கொள்வதை தடுப்பது நல்லது. ஏனெனில் இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை பெரிய குறைக்கும். எனவே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கொத்தமல்லி அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவர்களின் சர்க்கரை அளவில் பெரிய ஏற்படும். இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம்.

MOST READ: இந்த நட்சத்திரங்கள் மிகவும் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாம்... உங்க நட்சத்திரம் என்ன?

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

நிறைய கொத்தமல்லி சாப்பிடுவது இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இதிலிருக்கும் பொட்டாசியம் ஆகும், இது உடலில் இருக்கும் சோடியத்தின் விளைவை குறைக்கும். இது உங்களின் ஒட்டுமொத்த இதயத்திற்கு நல்லது ஏனெனில் சோடியம் உங்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறவர்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். சீரான இரத்த அழுத்தத்தை பராமரிக்க கொத்தமல்லியை குறைவாக சாப்பிடவும்.

ஊட்டச்சத்துக்களுடன் குறுக்கீடு

ஊட்டச்சத்துக்களுடன் குறுக்கீடு

கொத்தமல்லி உங்கள் உடலில் இருக்கும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களுடன் குறுக்கீட்டை ஏற்படுத்தும். இதிலிருக்கும் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் பாதரசம், காட்மியம், லெட் போன்றவற்றுடன் குறுக்கிட்டு அவற்றின் வெளியேற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஒளிசேர்க்கை

ஒளிசேர்க்கை

சில ஆய்வுகள் கொத்தமல்லி மற்றும் கொத்தமல்லி விதைகள் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன. உங்கள் தோல் மிகவும் உணர்திறன் மற்றும் சூரிய கதிர்களுக்கு கிட்டத்தட்ட ஒவ்வாமை ஏற்படுகிறது. இது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான சரியான வழிமுறை இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை.

MOST READ: பெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

கல்லீரல் பிரச்சினைகள்

கல்லீரல் பிரச்சினைகள்

கொத்தமல்லியை நீண்ட காலமோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது கல்லீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கொத்தமல்லி விதைகளில் உள்ள எண்ணெய் கூறுகள் பொதுவாக கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன, ஆனால் அதன் அதிகப்படியான பயன்பாடு சுரப்புக்கு மேல் பித்தத்தை ஏற்படுத்தி அசாதாரண நிலைமைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Serious Side Effects of Corinader Leaves

Here are some serious side effects of coriander leaves
Story first published: Friday, November 15, 2019, 17:37 [IST]
Desktop Bottom Promotion