நிலக்கடலை Vs. மக்கானா - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

நிலக்கடலை மற்றும் மக்கானா போன்றவற்றை உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்ற திண்பண்டங்களாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஊட்டச்சத்து மிகுந்தவை. நமது வயிற்றை நிரப்பக்கூடியவை.

உடல் எடையைக் குறைக்க நாம் பல திட்டங்களைத் தீட்டுகிறோம். அந்த திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமென்றால், நாம் சாப்பிடும் திண்பண்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த திண்பண்டங்களை நாம் சாப்பிடும் போது அவை உணவு நேரங்களுக்கிடையே நம்மை பசியெடுக்காமல் வைப்பதோடு, ஆரோக்கியமற்ற திண்பண்டங்களை சாப்பிடுவதிலிருந்தும் நம்மை காக்கிறது.

Peanut vs. Makhana: Which Is A Better Snack For Weight Loss?

நிலக்கடலை மற்றும் மக்கானா போன்றவற்றை உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்ற திண்பண்டங்களாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஊட்டச்சத்து மிகுந்தவை. நமது வயிற்றை நிரப்பக்கூடியவை. அதே நேரத்தில் நமக்கு சக்தியையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் சற்று கடினமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையைக் குறைக்கும் நிலக்கடலை

உடல் எடையைக் குறைக்கும் நிலக்கடலை

பொதுவாக எல்லா விதைகளுமே நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மற்றும் நமது பசியாற்றக்கூடிய திண்பண்டங்களாக இருக்கின்றன. எனினும் இவற்றில் நிலக்கடலை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. ஏனெனில் நிலக்கடலையின் விலை குறைவு. அதோடு நிலக்கடலையில் அதிகமான அளவில் புரோட்டீன்கள் மற்றும் உயர்தரமான கொழுப்புகள் அடங்கியிருக்கின்றன.

நிலக்கடலையின் நன்மைகள்

நிலக்கடலையின் நன்மைகள்

நிலக்கடலை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதோடு நிலக்கடலை இரத்தத்தின் அளவை நிலையாக வைத்திருக்கும். நமது உடல் எடையையும் அதிகரிக்காமல் அதே நேரத்தில் நமது பசியையும் கட்டுப்படுத்துவதற்கு நிலக்கடைலையை சாப்பிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகரிக்கும் நிலக்கடலை, நமக்கு மலச்சிக்கல் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல் எடையைக் குறைக்கும் மக்கானா/தாமரை விதைகள்

உடல் எடையைக் குறைக்கும் மக்கானா/தாமரை விதைகள்

மக்கானா நமது உடலுக்குத் தேவையான பொட்டாசியம், இரும்பு, கால்சியம், புரோட்டீன் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. அதனால் அது நமது உடல் எடையைக் குறைப்பதோடு நமது தசைகளையும் வலுப்படுத்துகிறது. மக்கானாவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் பலரும் இதை விரும்பி உண்கின்றனர். 50 கிராம் மக்கானாவில் 180 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதோடு இதில் ஆரோக்கியமற்ற கொழுப்பும் இருப்பதில்லை.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

மக்கானாவில் கேம்ஃபெரோல் (kaempferol) என்ற ஃப்ளேவனாய்டு (flavonoid) உள்ளது. இது உடல் வீக்கம் மற்றும் விரைவில் முதுமையடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உணவு நேரங்களுக்கு இடையே நமக்கு பசி ஏற்படாமல் மாக்கானா வைத்திருக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், தூக்கமின்மை, நீரழிவு நோய் மற்றும் மலட்டுத் தன்மை போன்ற நோய்களையும் குணப்படுத்தும் சக்தியை மக்கானா கொண்டிருக்கிறது.

நிலக்கடலையா? மக்கானாவா?

நிலக்கடலையா? மக்கானாவா?

நிலக்கடலை மற்றும் மக்கானா ஆகிய இரண்டுமே ஏறக்குறைய சம அளவிலான ஊட்டச் சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு உணவுப் பொருள்களுமே நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதிலிருந்தும் அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகள் மீது நாம் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் குறைக்கிறது. ஆகவே இந்த உணவுகளை நமது உணவுப் பட்டியலில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமான வித்தியாசம்

முக்கியமான வித்தியாசம்

நிலக்கடலை மற்றும் மக்கானா ஆகிய இவற்றிற்கிடையே உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் அவற்றில் இருக்கும் கலோரிகளின் அளவாகும். நிலக்கடலையில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் மக்கானாவில் குறைவான கலோரிகளே இருக்கும்.

ஆகவே கலோரிகள் குறைவாக வேண்டும் என்பவர்கள் மக்கானாவை உண்ணலாம். கலோரிகள் அதிகமாக வேண்டும் என்பவர்கள் நிலக்கடைலையை உண்ணலாம். அதே நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால் அதிகமான பலன்கள் கிடைக்கும். நிலக்கடலையையும் மக்கானாவையும் பொறித்து நமது சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம். ஆனால் எதுவுமே அளவுக்கு அதிகமாக இருந்துவிடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion