மஞ்சள் காமாலை இருக்கிறவங்க என்ன சாப்பிடணும்? என்னல்லாம் சாப்பிடக்கூடாது?

மஞ்சள் காமாலை இருக்கிறவங்க என்ன உணவு சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பதைத் தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் குறிப்பிடுகிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலை பாதிக்கும் ஒரு நிலையாகும். பிலிரூபின் என்ற பொருள் நமது இரத்தத்தில் அதிகரிக்கும் போது மஞ்சள் காமாலை வருகிறது.

இது ஒரு நோயல்ல. உடல் உறுப்பு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். இதனால் சருமம், கண்கள் போன்றவை மஞ்சள் நிறத்தில் தெரிய ஆரம்பித்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்த நிறமிகளின் அதிகரிப்பு

பித்த நிறமிகளின் அதிகரிப்பு

மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி என்பது பித்த நிறமியின் அதிகரிப்பாகும். இந்த நோய் வயது வரம்பு இல்லாமல் அனைவரையும் தாக்க கூடியது.

அதன் அறிகுறிகள்

அடிவயிற்றில் வலி

தலைவலி

காய்ச்சல்

குமட்டல்

பசியின்மை

உடல் எடை இழப்பு

வாந்தி

மஞ்சள் காமாலை வர மற்ற காரணங்கள்

மஞ்சள் காமாலை வர மற்ற காரணங்கள்

மலேரியா

சிரோஸிஸ்

கல்லீரல் நோய்

தேவையற்ற நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது. மருந்துகள் மட்டுமே மஞ்சள் காமாலையை குணப்படுத்தாது. உணவுக் கட்டுப்பாடுகளும் நிலையை மேம்படுத்த உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உப்பு மற்றும் காரமான உணவுகள்

எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகள்

சமைக்காத மற்றும் அரைகுறையாக சமைத்த உணவுகள் வேண்டாம்.

கடைபிடிக்க வேண்டிய பழக்கம்

எளிதில் சீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

மஞ்சள் காமாலைக்கான டயட் முறைகள்

மஞ்சள் காமாலைக்கான டயட் முறைகள்

உங்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால் முதலில் எளிதில் சீரணிக்கக் கூடிய உணவுகளை எடுத்து வாருங்கள். உப்பு, கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை அளவோடு சேர்த்து வருவது நல்லது. சரியான கட்டுப்பாடுடனான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் மஞ்சள் காமாலையில் இருந்து வெளி வரலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட கொழுப்பு உணவுகள், மாமிச உணவுகள் போன்றவற்றை செரிக்க கல்லீரல் கஷ்டப்படும். இதனால் கொழுப்புகள் உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். எளிதில் சீரணமாகும்.

கல்லீரலின் முக்கியம்

கல்லீரலின் முக்கியம்

நமது உடலில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இது தான் நமது உணவை செறிந்து அதை நமக்கு ஆற்றலாக தருகிறது. எனவே இந்த உறுப்பின் செயல்பாடு பாதிக்கப்படும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. அதே மாதிரி நாம் உண்ணும் உணவுப் பழக்கமும் கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதிகமான கொழுப்பு, சர்க்கரை போன்றவற்றை தவிருங்கள். மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே கல்லீரலை இயற்கையான வழியில் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

சாப்பிட வேண்டிய உணவுகள்

தக்காளி

மஞ்சள் காமாலை சமயத்தில் நீங்கள் தக்காளியை தாராளமாக எடுத்து வரலாம். இதில் ஏராளமாக விட்டமின் சி சத்து உள்ளது. இதிலுள்ள லைக்கோபீன் கல்லீரல் செல்களை புதுப்பிக்கிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள ப்ளத்தோரா என்ற பொருள் மஞ்சள் காமாலையை போக்க வல்லது. அதுமட்டுமல்லாமல் இதில் நிறைய விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரலில் உள்ள செல்களை சுத்தம் செய்து புதுப்பிக்கிறது.

கரும்புச் சாறு

கரும்புச் சாறு

அடிக்கடி கரும்புச் சாறு குடித்து வந்தால் மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம். இது கல்லீரல் திறனை அதிகரிக்கவும், சீரண சக்திக்கும் உதவுகிறது.

லெமன்

லெமன்

லெமன் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த ஒன்று. எனவே வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடித்து வரும் போது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது.

காரட்

காரட்

காரட்டில் பீட்டா கரோட்டீன் என்ற சத்து அதிகளவில் உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் அளவும் குறைவாக இருப்பதால் கல்லீரலுக்கு நல்லது. விட்டமின் ஏ மற்றும் சி போன்றவைகளும் அடங்கியுள்ளன. இது நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது.

பட்டர் மில்க்

பட்டர் மில்க்

பட்டர்மில்க்கில் கால்சியம், இரும்புச் சத்து கொழுப்பு இல்லாமல் இருப்பதால் எளிதில் சீரணமாகும். எனவே இதை தினமும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலையை விரட்டி விடலாம்.

தண்ணீர் அருந்துங்கள்

தண்ணீர் அருந்துங்கள்

தினமும் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். ஹெர்பல் டீயும் குடித்து வரலாம்.

இதர உணவுகள்

இதர உணவுகள்

தேன், ஆரஞ்சு தோல், பைன் ஆப்பிள், பப்பாளி மற்றும் மாம்பழம் போன்றவற்றில் எளிதில் சீரணிக்கக் கூடிய என்சைம்கள் உள்ளன.

பழங்கள் மற்றும் காய்கறிகளான அவகேடா, திராட்சை, சிறுதானியங்கள், திராட்சை மற்றும் மாதுளை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

பிரக்கோலி, கீரைகள், பெர்ரீஸ், பாதாம் பருப்பு, ப்ரவுன் ரைஸ், ஓட்ஸ் மீல் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த உணவுகள் கூடாது

இந்த உணவுகள் கூடாது

அதிக புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது சீரணிக்க சிரமப்படும். இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உப்பு

உப்பு

அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிருங்கள். இது உங்கள் கல்லீரலில் உள்ள செல்களை அதிகளவு பாதிக்கும். எனவே ஊறுகாய், உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்.

மாமிசம்

மாமிசம்

மஞ்சள் காமாலை இருப்பவர்கள் மாமிசத்தை சாப்பிடுவதை தவிருங்கள். ஏனெனில் இதிலுள்ள சேச்சுரேட்டு கொழுப்பு கல்லீரலுக்கு நல்லது இல்லை.

பட்டர்

பட்டர்

அதிகமாக பட்டரை எடுத்துக் கொள்ளும் போது உடம்பில் எதிர்மறை விளைவை உண்டாக்கும். ஏனெனில் பட்டரில் உள்ள சேச்சுரேட்டு கொழுப்புகள் கல்லீரல் செயல்பாட்டை குறைத்து விடும்.

பேசில்

பேசில்

பேசிலில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளன. அதே மாதிரி இதிலுள்ள புரோட்டீன் சத்துகள் கல்லீரலால் சீரணிக்கப்படுவதை தடுக்கிறது.

முட்டை

முட்டை

அதிக அளவிலான கொழுப்பு மற்றும் புரோட்டீன் இருப்பதால் மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

மேற்கண்ட டயட் முறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் மஞ்சள் காமாலை வருவதை நீங்கள் தடுக்க முடியும். மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரம் மீள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, July 27, 2019, 11:55 [IST]
Desktop Bottom Promotion