Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
பெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
பெருங்குடல் தொற்று ஒரு பொதுவான தொற்றுநோயாகும். ஒவ்வொரு வருடமும் இந்நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். குடல் தொற்று ஏற்படாமல் இருக்க, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அதிகம் தேர்ந்தெடு
சமீபத்தில் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார். இவர் நியூரோ எண்டோகிரைன் கட்டியால் நீண்ட காலமாக அவஸ்தைப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் தீவிர பெருங்குடல் அழற்சியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

பெருங்குடல் தொற்று ஒரு பொதுவான தொற்றுநோயாகும். ஒவ்வொரு வருடமும் இந்நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். குடல் தொற்று ஏற்படாமல் இருக்க, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்வது ஒரு சிறந்த வழி. இதனால் குடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். இப்போது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடல் தொற்றைத் தடுக்க உதவும் உணவுகளைக் காண்போம்.

பப்பாளி
வயிற்றுப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பப்பாளியை சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் அல்லது இதர செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர். பப்பாளியில் ஸ்பெஷலான உயவுப் பொருட்கள் மற்றும் நொதிகள் உள்ளன. இவை குடலை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

மாம்பழம்
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழத்தில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து ஏராளமான நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்தால், உடலில் செரிமான செயல்முறை மேம்படும் மற்றும் குடல் சுத்தமாக பராமரிக்கப்படும்.

ஆளி விதை
ஆளி விதையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், குடல் ஆரோக்கியத்திற்கு இதை ஒவ்வொருவரும் கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குடல் தாவரங்களை பராமரிக்க உதவுகிறது. இதன் காரணமாக செரிமான செயல்முறை சீராக நடைபெறுகிறது. இது பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது மற்றும் தனிப்பட்ட பகுதியில் உள்ள தொற்றுக்களையும் தவிர்க்கிறது.

ஆப்பிள்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதை பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது வெறும் வாக்கியம் அல்ல. அது உண்மையும் கூட. ஆப்பிளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுடன், அதிகப்படியான நார்ச்சத்தும் உள்ளதால், குடல் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களையும் அவ்வப்போது வெளியேற்றும்.

கிராம்பு
கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகளும் நிறைந்துள்ளது மற்றும் புற்றுநோயை எதிர்த்து உடலுக்கு பாதுகாப்பும் அளிக்கும். இதை ஒருவர் அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், அது குடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் வயிற்றில் அல்சர் ஏற்படுவதைத் தடுக்கும்.

கற்றாழை
கற்றாழை எப்போதுமே நச்சுத்தன்மை நீக்கும் மிகவும் சிறப்பான பொருளாக கருதப்படுகிறது. ஆகவே குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நினைப்பவர்கள், கற்றாழையை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதில் குடல் சுவர்களை மென்மையாக பராமரிக்கும் மற்றும் குடலில் தேங்கியுள்ள அழுக்குகள் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பண்புகள் நிறைந்துள்ளது.

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் உள்ள மருத்துவ பண்புகள், குடல் தொற்றுக்களைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சிறுநீர் பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளாபல், குடல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும். எனவே தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
