Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?
எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். சாப்பாடு என்றால், மற்ற வேலைகளை கூட கண்டு கொள்ளாத அளவிற்கு சாப்பாட்டின் மீது அதீத காதல் பலருக்கும் உள்ளது. சாப்பாட்டை பற்றிய மீம்ஸ், வீடியோக்கள், படங்கள் போன்றவற்றிற்கு பஞ்சமே இல்லை. குறிப்பாக சாப்பாட்டை பற்றிய மீம்ஸ் வந்தால் உடனே "சோத்து மூட்டையாக" யார் உள்ளார்களா அவர்களை டேக் செய்து கலாய்த்து கொண்டே இருப்போம்.

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளின் மீது தான் பலருக்கும் விருப்பம் அதிகம். சிக்கன், மட்டன், பீப்ஃ போன்றவற்றை பார்த்து விட்டால் ஒரு கட்டு கட்டிவிடுவர். இது போன்ற அசைவ உணவுகளை விடவும் சைவ உணவுகளில் அதிக ஆரோக்கியம் உள்ளது என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன.
குறிப்பாக நாம் எப்போதாவது சாப்பிடும் உணவுகளை உதாரணத்திற்கு சொல்லலாம். அசைவ உணவுகளில் இருக்கும் சத்துக்களை விட சைவ உணவில் என்னென்ன வகையான சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அசைவ விரும்பிகள்
வீட்டில் ஞாயிற்று கிழமை வந்தால் வெளியில் செல்லாமல் வீட்டிலே இருப்போர் பலர். அதுவும் இந்த அசைவ உணவுகளை பார்த்து விட்டு அவர்களுக்கு வெளியில் போக வேண்டும் என்கிற எண்ணம் கூட வராது.
ஆனால், நாம் நினைப்பதை காட்டிலும் சில உணவுகளில் சிக்கன், மட்டனை விடவும் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதை கேட்டால் அசைவ விரும்பிகளுக்கு நிச்சயம் ஆச்சரியமாக தான் இருக்கும்.

பாதாம்
புரதசத்து அதிகம் நிறைந்த உணவுகளில் பாதமும் ஒன்று. 1 கப் பாதாமில் 12 கிராம் நார்ச்சத்தும், 264 மி.கி கால்சியமும், 3.7 மி.கி இரும்புச்சத்தும் உள்ளது.
மேலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகமாகவே இருக்கிறது. சிக்கன், மட்டனை விடவும் இதில் சத்துக்கள் நிறைந்துள்ளது.

பூசணி விதைகள்
சிக்கனில் உள்ள அதே அளவிலான சத்துக்கள் தான் பூசணி விதையிலும் உள்ளது. 1 கப் பூசணி விதையில் 18 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. தினமும் சிறிதளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு நல்லது.

சோயா பீன்ஸ்
1 கப் சிக்கனில் 43.43 கிராம் அளவு புரதசத்து உள்ளது. ஆனால், 1 கப் சோயா பீன்ஸில் 68 கிராம் அளவு புரதம் உள்ளது.
சிக்கனை விடவும் இதில் தான் புரதசத்து அதிகமாக உள்ளது. இதே போல தான் சிக்கனில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை விடவும் சோயா பீன்ஸில் அதிக அளவு உள்ளது.

ஆளி விதைகள்
இரும்பு சத்து குறைபாடு உள்ளோருக்கு ஆளி விதைகள் சிறந்த தீர்வை தரும். 1 கப் ஆளி விதையில் 9.6 மி.கி அளவு இரும்புசத்து உள்ளது.
இவை மட்டனில் உள்ள இரும்புச்சத்தை விடவும் அதிகமானது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டனை விடவும் இது உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கசகசா
கறிக்குழம்பு போன்றவற்றில் அதிக அளவு இந்த கசகசாவை சேர்ப்பார்கள். இதில் சுமார் 19.5 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது மட்டனில் உள்ள சத்தின் அளவிற்கு ஈடானது. மேலும், இது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆரோக்கியம் முக்கியம்!
உண்ணும் உணவின் தரம் எப்போதுமே இன்றியமையாததாகும். கண்ட உணவுகளை சாப்பிட்டால் அவை நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து விடும். அசைவ உணவாக இருந்தாலும் அவற்றின் அளவு மிக முக்கியமானதாகும்.
அசைவ உணவில் இருக்க கூடிய சத்துக்கள் தான் இந்த வகை உணவுகளிலும் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த உணவு வகை பெரும்பாலும் உதவும்.



Click it and Unblock the Notifications