Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க! இல்லைனா அவ்வளவு தான்!
பொதுவாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது பெரும்பாலும் மொத்தமாக வாங்கி விடுவோம். இவற்றில் பல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. நமது வீடுகளில் உள்ள பல விஷயங்களிலும் அப்படி தான். வீட்டிற்கு வாங்கும் பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம்.

அவ்வாறு வாங்க விடில் அவை நமது ஆரோக்கியத்தை தான் நேரடியாக பாதித்து விடும். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது ஆரோக்கியம் தான் முற்றிலுமாக பாதிக்கப்படும். கடையில் காய்கறிகளை வாங்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கத்தரிக்காய்
பொதுவாக கத்தரிக்காயை வாங்கும் போது அவற்றின் அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். மேலும், அவை மிகவும் முத்தி இருக்க கூடாது. அப்போது தான் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.

மாங்காய்
பலர் மாங்காயை வாங்குவதற்கு பதிலாக மாம்பழத்தை வாங்கி விடுவோம். எப்போதும் அழுத்தி பார்த்தே பழங்களை வாங்க வேண்டும். மேலும், மேலும், சிவப்பு நிறத்தில் இருந்தால் அவை பழத்துள்ளது என அர்த்தம் கிடையாது.

கேரட்
பொதுவாக மண்ணிற்கு அடியில் விளைய கூடிய காய்கறிகளை நாம் வாங்கினால் அவற்றின் வெளி தோற்றத்தை வைத்தே நல்ல காயா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம்.
முக்கியமாக அதன் தோல் பகுதி மிகவும் வறண்டு காணப்பட்டாலோ அல்லது வெடி வெடிப்பாக இருந்தாலோ அவை பழைய காயாகும்.

வெங்காயம்
வெங்காயத்தை வாங்கும் போது அவற்றின் மணத்தை வைத்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். வெங்காயம் வாங்கும் போது அதிக வாசனை வந்தால் அவை விரைவில் அழுகி போய் விடும் என்பதை குறிக்கின்றன. எனவே, வாங்கும் போது வெங்காயத்தின் வாசனை மிகவும் முக்கியம்.

அவரை
இதனை பொதுவாக நாம் வாங்கும் போது பெரிதாக எதையும் கவனிக்க வேண்டியதில்லை. ஆனால், கருப்பு நிறத்தில் இருந்தால் அவற்றை பூச்சி அரித்துள்ளது என்று அர்த்தமாம். மேலும், வெள்ளை நிறத்தில் அதன் மீது இருந்தால் அதனை கண்டு கொள்ள வேண்டியதில்லை.

பீட்ரூட்
பீட்ரூட்டின் மீது அதிக வெடிப்புகள் இருந்தால் அதனை வாங்காதீர்கள். மேலும், இது இதன் தோல் பகுதி வறண்டு இருந்தால் இவை பல நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் காய் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழைக்காய்
வாழைக்காயை தட்டி பார்த்து வாங்க வேண்டும் என தளபதி விஜய் ஒரு படத்தில் கூறுவார். ஒரு புறத்தில் இது உண்மையும் கூட.
வாழைக்காயை தட்டி பார்த்து வாங்கினால் நல்லது. அவ்வாறு தட்டி பார்க்கும் போது அவை காயாக உள்ளதா? இல்லை பழமாக உள்ளதா? என்பதை உணர முடியும்.



Click it and Unblock the Notifications