For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை இல்லாதவங்க ஒரு வாரம் இந்த பழத்த இப்படி சாப்பிடுங்க... நிச்சயம் குழந்தை உண்டாகும்...

By Mahibala
|

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள். நிச்சயமாகக் குழந்தை பேறு உண்டாகும். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த பழத்தைச் சாப்பிடுவதால் ஆண்களுக்கு விந்து உயிரணுக்கள் பலம் பெருகும். எண்ணிக்கை அதிகரிக்கும்.

Health Benefits of Cactus Fruit

அதேபோன்று பெண்களுக்கு கருப்பை கட்டி, நச்சுக்கள் என் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அதை சரிசெய்து விடும் ஆற்றல் இந்த பழத்துக்கு உண்டு. அதனால் நிச்சயம் நச்சுக்கள் நீங்கி, கருமுட்டை பலம் பெற்று குழந்தைப்பேறு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்பாத்திக்கள்ளி பழம்

சப்பாத்திக்கள்ளி பழம்

இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்திக் கள்ளிப்பழம். இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும். இந்த பழத்தை நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நம் தலைமுறையினர் பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளுக்குக் கொடுக்கும் மரியாதையை இலவசமாக ஆனால் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளை நாம் மதிப்பதே இல்லை.

எப்படி சாப்பிடுவது?

எப்படி சாப்பிடுவது?

இந்த சப்பாத்திக் கள்ளிப் பழத்தை யாரும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால் இதை அவ்வளவு எளிதாகப் பறித்துச் சாப்பிட முடியாது. அது நம்மை நெருங்கவே விடாது. அதில் பழம் முழுக்க நிறைய முட்கள் இருக்கும். அங்கங்கே இருந்தால் பரவாயில்லை. குட்டி குட்டியாக ஒவ்வொரு பழத்திலும் ஆயிரக்கணக்கான முட்கள் இருக்கும்.

கைகளால் பறிப்பது கஷ்டம். தொரட்டிக் கொண்டு தான் பறிக்க வேண்டும். பறித்த இந்த பழத்தை ஒரு துணியில் வைத்துக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த திசையில் இருந்து முள் குத்தும் என்பதே தெரியாது.

இந்த பழத்தை ஒரு சுத்தமாக கல்லில் வைத்து நன்கு உரச வேண்டும். அப்படி உரசும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் முட்கள் உதிர்ந்துவிடும். அதன்பிறகு பழத்தைப் பிரித்துப் பார்த்தால் நடுவில் நட்சத்திர வடிவில் பெரிய தொண்டை முள் இருக்கும். அந்த முள்ளையும் வெளியே எடுத்துவிட்டு தான் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது தொண்மையில் குத்தி உறுத்தும்.

MOST READ: தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...

சுவையோ சுவை

சுவையோ சுவை

ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் நிறைய பணம் போட்டு வாங்கும் பழங்களை விட இதன் சுவை உங்களைக் கவர்ந்திழுத்து விடும். மிகவும் அதிக இனிப்புச் சுவை கொண்டது. ரத்த சிவப்பு நிறத்தில் மிக தித்திப்பாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இந்த பழத்தைத் தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க முடியும்.

கருப்பைக் கட்டிகள்

கருப்பைக் கட்டிகள்

இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன. இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

MOST READ: அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா? இவங்கதான் அது...

விந்து எண்ணிக்கை அதிகரிப்பு

விந்து எண்ணிக்கை அதிகரிப்பு

குழந்தைப் பேறின்மை, ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த பழம் தீர்க்கிறது.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம். குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம்.

MOST READ: உங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்?

 கடைபிடிக்க வேண்டியவை

கடைபிடிக்க வேண்டியவை

இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களோ விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களோ சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருள்களும் சாப்பிடக் கூடாது.

டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Cactus Fruit

Have you ever tried prickly pear? Despite its unusual appearance, this fruit is delicious and loaded with nutrients. Also known as cactus fruit, tuna fruit or cactus pear, it boasts a naturally sweet flavor and can be used in various desserts. Plus, it's very low in calories and sugars, which makes it ideal for ketogenic and low-carb diets.
Story first published: Thursday, May 30, 2019, 14:53 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more