For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனை நீரில் கலந்து குடித்தால் இவ்வளவு ஆபத்தா..! ஆயுர்வேதம் கூறும் திடுக்கிடும் உண்மை..!

|

இந்த பூமியில் இருக்க கூடிய ஒவ்வொரு உணவு பொருளுக்கும் ஒரு தனி தன்மை உள்ளது. நாம் உணவுகளை தனியாக சாப்பிடும் போது அவற்றின் தன்மை மாறாது. ஆனால், நாம் பெரும்பாலும் அவ்வாறு சமைத்து சாப்பிடுவது கிடையாது. எனவே, உணவை வேறொரு பொருளோடு சாப்பிடும் போது தான் அதன் ருசி அதிகரிக்கிறது.

தேனை நீரில் கலந்து குடித்தால் விஷமாகிடுமோ..! ஆயுர்வேதம் கூறும் உண்மை என்ன..?

இவ்வாறு நாம் உணவை வேறொரு உணவோடு சாப்பிடுவதற்கும் ஒரு வரைமுறை உண்டு என ஆயுர்வேதம் கூறுகிறது. அந்த வகையில் பலவித மருத்துவ குணம் கொண்ட தேனை நாம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளோடு கலந்து சாப்பிட கூடாதாம். மீறி சாப்பிட்டால் அவை முழுவதுமாக மாறி விஷ தன்மை பெற்று விடும்.

இது தேனிற்கு மட்டும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவுகள் பலவற்றில் இதே செயல்பாடு தான் உள்ளது. தேனுடன் எந்தெந்த உணவுகள் கலந்து சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்..தேன்..!

தேன்..தேன்..!

உணவு வகைகளில் அதிக காலம் கெட்டு போகாத தன்மை தேனிற்கு தான் உள்ளது. அன்றாடம் தேனை சில உணவுகளோடு காலையில் சாப்பிட்டு வந்தால் ஆயுள் கூடும்.

சித்த வைத்தியம் முதல் ஆயுர்வேதம் வரை தேன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே விஷமாகினால்... அவ்வளவு தான்..!

தேனும் நெய்யும்..!

தேனும் நெய்யும்..!

நெய்யில் உள்ள பண்புகளை போன்றே தேனில் பலவித தனித்துவமான பண்புகள் உள்ளன. இவை இரண்டுமே எதிர் கோட்டில் சந்திக்க கூடியவை. எப்போதுமே தேனில் நெய்யை கலந்து சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

தேனும் பாலும்..?

தேனும் பாலும்..?

பொதுவாக பாலில் பலவித உணவுகளை நாம் சேர்த்து சாப்பிடுவோம். அந்த வகையில் தேனும் அடங்கும். நாம் தேனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அதிக ஆரோக்கியம் ஏற்படும். ஆனால், இதனை சூடான பாலில் என்றுமே கலந்து சாப்பிட கூடாது. அவ்வாறு கலந்து சாப்பிட்டால் தேன் அதன் வெப்பநிலையை தாங்காமல் நச்சு தன்மையுடன் மாறுகிறது.

முள்ளங்கியும் தேனும்

முள்ளங்கியும் தேனும்

நாம் சாப்பிட கூடிய உணவுகள் கசப்பு தன்மையாக இருந்தால் அவற்றில் தேன், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவோம். அந்த வகையில் முள்ளங்கியில் அதிக சுவை சேர்வதற்காக ஒரு போதும் தேனை கலந்து சாப்பிட்டு விடாதீர்கள். தேனும் முள்ளங்கியும் சேர்ந்தால் விஷய தன்மையாக மாறி விடுமாம்.

MOST READ: ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?

தேனும் நீரும்..!

தேனும் நீரும்..!

சிலருக்கு வயிற்று கோளாறு இருப்பதால் அதனை சரி செய்ய சூடு நீரில் தேனை கலந்து குடிப்பதுண்டு. ஆனால், இது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தெரியாமலே செய்து வருகின்றனர். சுடு நீரில் தேன் கலந்து குடிப்பதால் அவற்றின் தன்மை திரிந்து விஷமாக மாறி விடுமாம்.

தேனும் அதன் பண்பும்..!

தேனும் அதன் பண்பும்..!

எல்லா வகை உணவிற்கும் கொதி நிலை மற்றும் குளிர் நிலை இருக்க தான் செய்யும். அதே போன்று தேனிற்கும் கொதி நிலை என்பது உண்டு. தேனை 140 டிகிரி வெப்பத்திற்கு மேல் சூடு செய்தால், தேன் விஷமாக மாறி விடும். இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்ய பட்டுள்ளது.

காரணம் என்ன..?

காரணம் என்ன..?

தேனை வெப்பம் செய்தாலே அல்லது வெப்பமான பொருளோடு சேர்த்தலோ 5-hydroxymethyl furfuraldehyde (HMF) என்கிற வேதி தன்மையை அதிகரித்து கொள்ளும். இது தான் தேன் முழுவதுமாக நஞ்சாக மாறுவதற்கு காரணம். மேலும், இது போன்ற வேதி தன்மை உடலில் சேர்ந்தால் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய அபாயமும் உண்டு.

அசைவமும் தேனும்

அசைவமும் தேனும்

அசைவம் சாப்பிட்டு விட்டு ஜீரணம் ஆகாததால் சிலர் முறையற்ற வழிகளை பின்பற்றி வருவார்கள். அதில் ஒன்று இதுவும். அசைவம் சாப்பிட்ட பிறகு செரிமானம் சரியாக ஆகவில்லை என்றால், அதற்கு ஒரு போதும் தேனை சாப்பிட்டு விடாதீர்கள். இவை மேலும், வயிற்று கோளாறை அதிகரித்து உபாதைகளை தரும். இனி மேலும் சில தவறான கலவை உணவுகளை பார்ப்போம்.

MOST READ: தாடி மற்றும் மீசையில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் வீட்டில் உள்ள மூலிகைகள் என்னென்ன..?

வாழையும் பாலும்..!

வாழையும் பாலும்..!

ஆயுர்வேதத்தின் படி எப்போதுமே வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம். இது செரிமான கோளாற்றை உண்டாக்குவதோடு வயிற்று உபாதைகளையும் தரும். கூடவே உறுப்புகளின் செயல் திறனை குறைத்து விடும்.

கிரீன் டீயும் பாலும்

கிரீன் டீயும் பாலும்

கிரீன் டீயை பாலில் கலந்து குடித்தால் அதன் நன்மை செய்ய கூடிய பண்பு மாறி விடும். கிரீன் டீயின் பலவித பயன்களும் பாலுடன் கலந்து குடிக்கும் போது தலைகீழாக மாறி விடுமாம்.

துளசியும் பாலும்

துளசியும் பாலும்

துளசியை இலையாகவோ அல்லது மாத்திரையாகவோ ஒரு போதும் பாலில் கலந்து குடித்து விடாதீர்கள். இவை துளசியின் மூலிகை தன்மையை குறைத்து சாதாரண இலையை போன்ற தன்மையை தந்து விடும். சிலருக்கு இது மோசமான பாதிப்பையும் உடலில் ஏற்படுத்த கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Should Not Mixed With Honey

Here we listed some foods that must not be mixed with honey.
Desktop Bottom Promotion