Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
உடம்புல நோயே வரமா இருக்க, இந்த உணவுகள வாரத்திற்கு ஒரு முறையாச்சும் சாப்பிடுங்க..!
நோயே இல்லாம அதிக நாள் வாழணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால், அதற்கு ஏத்தது போல நம்ம உடம்ப வச்சுக்கிட்டா மட்டும் தான் நோய்களின் தாக்கம் பெரிய அளவுல இருக்காது. சில உணவுகள் அதிக எதிர்ப்பு சக்தியை தர கூடியதாக இருக்கும். இது போன்ற உணவுகள் முதலில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் பிறகு நமது உடலில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.

பொதுவாகவே உணவுகளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றில் உள்ள தாதுக்களை வைத்து தான் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும். எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பல விதமான பாதிப்புகள் நம்மை வந்து சேரும். அந்த விதமான பாதிப்புகள் உடல் உறுப்புகளை நேரடியாக செயலிழக்க கூட செய்து விடும்.
நோய்கள் இல்லாமல் இருக்க சில முக்கிய உணவுகளை வாரத்திற்கு 1 முறையாவது சாப்பிட்டு வந்தாலே போதும். இனி அந்த வகையான உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

முருங்கை காய்
பொதுவாகவே அந்தந்த பருவ நிலையில் உற்பத்தி ஆக கூடிய உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே நோய்களின் தாக்கம் இருக்காது. அந்த வகையில் முருங்கை காயை வெயில் காலங்களில் அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் நோய்களின் பாதிப்பு குறையும். மேலும், முருங்கை பூ, முருங்கை கீரை ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

தேன்
பல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை தேனிற்கு உள்ளது. தேனை எலுமிச்சை சாறு அல்லது கிரீன் டீ போன்றவற்றில் சேர்த்து குடித்து வந்தால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்துடன் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களின் தாக்கத்தை குறைத்து விடும்.

தயிர்
எதிர்ப்பு சக்தியை இயல்பாகவே தர கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. லாக்டிக் அமிலம் அமிலம் உள்ள தயிர் மற்றும் மோர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்கும். கூடவே கிருமிகளை கொன்று உடலில் உண்டாக கூடிய தொற்றுக்களை தடுத்து விடும்.

இஞ்சி
உணவில் சீரான அளவு இஞ்சியை சேர்த்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும், வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
இதற்கு தேவையான பொருட்கள்..
இஞ்சி ஒரு துண்டு
வெந்தய பொடி 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் இஞ்சியை நசுக்கி கொண்டு அவற்றின் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இவற்றை வெந்தய பொடியுடன் சேர்த்து கொள்ளவும்.
இறுதியாக தேனை இவற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால் நோய்களின் தாக்கம் உங்களை நெருங்காது.

முட்டை கோஸ்
உடலுக்குள் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் முட்டைகோஸிற்கு உண்டு. இவற்றில் உள்ள அதிக படியான தாதுக்கள், வைட்டமின்கள், போன்றவை நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், இவை மஞ்சள் காமாலை, கணைய நோய்களையும் தடுக்கும்.

கேரட்
பீட்டா கேரோட்டின் அதிகம் கொண்ட கேரட்டை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் கூடும். குடலில் உள்ள புழுக்களை கொன்று பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து இது உங்களை காத்து கொள்ளும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பலன் அதிகம்.

வேம்பு
இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இந்த வேம்பிற்கு உண்டு. பல்வேறு தோல் நோய்களையும், தொற்று நோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், உடல் வலிமையை அதிகரிக்க வேம்பு உதவும்.

மஞ்சள்
சிறந்த கிருமி நாசி என்றால் அது மஞ்சள் தான். கிருமிகளை கொல்வது முதல் எலும்பு பிரச்சினை வரை அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் தீர்வை தர மஞ்சள் உதவும். உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது உடல் நலத்தை பாதுகாக்கும்.

எலுமிச்சை
நோய் தொற்றுக்களை அழிக்கும் திறன் எலுமிச்சையில் உள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்க இது பயன்படுகிறது.
வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் உடல் மிகவும் வலிமை பெறும்.



Click it and Unblock the Notifications