Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க...
சாப்பிட்டு முடித்ததும் டீ குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அது எந்த வகையில் உடலை பாதிக்கும் என்பது பற்றி தெரிந்து கொண்டாலே போதும் நாம் அதுபோன்ற தவறுகளைச் செய்வதை நிறுத்திவிடுவோம்.
தினமும் காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்க வைக்கும் ஒரு முக்கிய பானம் டீ என்னும் தேநீர். இதன் சுவை நாவை வருடும் போது உண்டாகும் ஆனந்தம் டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இத்தகைய தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
பழங்காலம் முதல் டீ பருகுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

தேநீர் சுவை
கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும். செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.

தேநீர் தயாரிப்பு
ஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர் இந்திய பாரம்பரிய மக்கள். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

நன்மைகள்
ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

தீமைகள்
உணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

பால் சேர்த்த டீ
குறிப்பாக இவற்றில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது.
ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.



Click it and Unblock the Notifications