Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாப்பிட்டதும் எதுக்களிக்குதா? அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா? ஏன் கூடாது?
சாப்பிட்டவுடன் எதுக்களிப்பதற்கான காரணங்கள் என்ன, அதற்கு என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
சாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த எதுக்களிப்பு பிரச்சினையால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வரும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வால்வு வரை வருகிறது. இப்படி எதுக்களிப்பது நாம் உண்ணும் சில உணவுகளால் ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
அமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள். இந்த மாதிரியான உணவுகள் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. சாலட் போன்றவற்றில் சுவையூட்ட பயன்படுத்தும் வினிகர் கூட இந்த பிரச்சனையை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாம்.

கார உணவுகள்
மிளகாய் பொடி, கருப்பு மிளகு, கடுகு போன்ற கார உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.

தக்காளி உணவுகள்
தக்காளி பயன்படுத்தும் உணவுகளான பாஸ்தா, சாஸ், தக்காளி சூப், தக்காளி ஜூஸ் போன்ற உணவுகளும் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.

அதிக கொழுப்பு உணவுகள்
கொழுப்பு உணவுகளான சாலமி, பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் சீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.

பொரித்த உணவுகள்
பிரஞ்சு ப்ரை, டவ் நட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மார்கரைன் போன்ற உணவுகள் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது. எனவே எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக வேக வைத்தல், வதக்குதல் மற்றும் பேக் செய்தல் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

பால் பொருட்கள்
பால் பொருட்கள் சீரண என்சைம்களை அதிகமாக்குகிறது. எனவே படுப்பதற்கு முன் பால் குடிப்பதை தவிருங்கள். கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் மில்க் ஷேக்கிற்கு பதிலாக கொழுப்பு குறைவான கொழுப்பில்லாத பாலை அருந்தலாம். இதன் மூலம் எதுக்களித்தலை தவிர்க்கலாம்.

காபினேட்டேடு பானங்கள்
காபி, டீ, ஆல்கஹால் மற்றும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போன்றவை வயிற்று பகுதி சுவற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

எண்ணெய் உணவுகள்
ஹைட்ரோஜெனரேட்டேடு மற்றும் பாதி ஹைட்ரோஜெனரேட்டேடு ஆயில் உணவுகளை தவிருங்கள். கேனோலா ஆயில் மற்றும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்கள்.

மொறு மொறுப்பான உணவுகள்
நட்ஸ், க்ராக்கர்ஸ், டோஸ்ட், பாப்கார்ன் மற்றும் குக்கீஸ் போன்ற மொறு மொறுப்பான உணவுகளை தவிருங்கள். இதுவும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.

அறிகுறிகள்
நெஞ்செரிச்சல்
வெளியே தள்ளுதல்
உணவை விழுங்குவதில் சிரமம்
நெஞ்சு வலி
சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வு
உணவு உட்கொண்ட பிறகு குமட்டல்
மேல் வயிற்றில் அசெளகரியம், வயிற்று வலி
வயிறு புடைப்பு
ஏப்பம்

டிப்ஸ்கள்
கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள்
சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்காதீர்கள்.
நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.



Click it and Unblock the Notifications