Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
சர்க்கரைவள்ளி கிழங்கு பெஸ்ட்டா?... வெள்ளை உருளைக்கிழங்கு பெஸ்ட்டா?
சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள் இரண்டும் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளிலிருந்தே உலகிற்கு பரவியது.
உலகின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்த உணவாக இருப்பது கிழங்கு வகைகள். இக்கிழங்கு வகையை உண்ணாத உயிரினமே இவ்வுலகில் இல்லை எனலாம். இவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம்.

இங்கே சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய கிழங்கு வகைகளில் சிறந்தது எது என்று பார்ப்போம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள் இரண்டும் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளிலிருந்தே உலகிற்கு பரவியது.
பொதுவாக எல்லா வகை கிழங்குகளில் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை. அதிக நார்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு நிறையும். இவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இது சத்துக்களின் கூடாரம், இதில் அனைத்து சத்துக்களும் உள்ளன.
இதில் மிகசிறந்த உயிர்ச்சத்துகளும் , விட்டமின் மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன.விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது.
தாவரவியல் பகுப்பு, சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய இரண்டு வகை கிழங்குகளையும் வெவ்வேறு பிரிவுகளில் வைத்துள்ளது.

உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கு சொலனாசியா குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகை செடிகள் சொலனைன் என்ற விஷத்தை வெளிப்படுத்தும். அது மட்டுமல்லாது உருளைக் கிழங்கு முலை விட்டால் அதனையும் உண்ணக்கூடாது, அதன் இலைகளையும் உண்ணக் கூடாது, ஏனென்றால் இவை இரண்டுமே விஷத்தை வெளிப்படுத்தும்.

பலன்கள்
உருளைக் கிழங்கைப் போலல்லாமல் சக்கரவள்ளிக் கிழங்கின் இலைகளையும் உண்ணலாம். அது மட்டுமல்லாது சக்கரவள்ளிக் கிழங்கு முலை விட்டால் அதனையும் உண்ணலாம்.
சக்கரவள்ளிக் கிழங்கு அல்லது உருளைக் கிழங்கு இவை இரன்டும் உடலுக்கு உகந்ததா? அல்லது சக்கரவள்ளிக் கிழங்கு அல்லது உருளைக் கிழங்கில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலின் எடையை கூட்டாதா? என்ற கேள்வி எழலாம்.
இது நிச்சயமாக புத்திசாலித் தனமான கேள்வி தான், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே காணலாம்.

ஸ்டார்ச்
இவை இரண்டிலும் எதிர்ப்பு ஸ்டார்ச் என்ற சத்தும், எளிதில் செரிக்ககூடிய நார்ச்சத்தும் இருக்கின்றன. இந்த எதிர்ப்பு ஸ்டார்ச் என்ற சத்து மனித உடலில் குட்டைச் சங்கிலி கொழுப்பு அமிலம் சுரக்க உதவுகிறது.
சக்கரவள்ளிக் கிழங்கில் சாதாரண உருளைக் கிழங்கை விட அதிக சர்க்கரை உள்ளது. இவை உடலுக்கு மிக உகந்தது.
மாறாக உருளைக் கிழங்கை குளிர்பதன பெட்டியில் சேமித்து வைத்தால் இதிலிருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறிவிடும்.
சக்கரவள்ளிக் கிழங்கு உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு மற்றும் வீக்கங்கள் உண்டானால் அவற்றை சரிப்படுத்தும். விட்டமின் பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளை கொண்டது. அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

நன்மைகள்
உருளைக் கிழங்கிலிருக்கும் குட்டைச் சங்கிலி கொழுப்பு அமிலம் உடலின் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.
1) வயிற்றில் வரக்கூடிய புற்று நோயை வராமல் தடுத்து விரட்டுகிறது.
2) மனித உடல் தனக்கு தேவையான தாது உப்புக்களையும், மற்ற சத்துகளையும் கிரகிக்க உதவி புரிகிறது.
3) மனித உடல் தனக்கு தேவையற்ற விஷத்தன்மைகளை வெளித்தள்ள உதவி புரிகிறது.
4) மனித உடல் திடமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகிறது.

ஆராய்ச்சி
உடலுக்கு தேவையான சத்துக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களான நியூட்ரீசனிஸ்ட்கள் கிளிசமிக் இன்டெக்ஸ் GI (Glycemic Index) மற்றும் கிளிசமிக் லோட் GL (Glycemic load) என்ற இரண்டு விஷயங்களை பற்றி விரிவாக விவாதிக்கின்றனர்.

கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட் கருவளர்ச்சிக்கு உதவும்.
சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய இரு வகை கிழங்குகளிலுமே உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரி விகிதத்திலேயே இருக்கின்றன.

நுரையீரல் நோயை குணமாக்க
நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது. இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

வயிற்று அல்சரை குணமாக்க
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் அல்சரை குணப்படுத்துகிறது.

எப்படிச் சாப்பிடலாம்
இந்த கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோ எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் முழுதும் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எண்ணெயில் பொறித்தால், அதன் சத்துக்கள் இழப்பு ஏற்படும், சத்துக்கள் சிதரும் வீனாகும் என்பதால் வேகவைத்து உண்ணுதல் சிறந்தது.



Click it and Unblock the Notifications