தினமும் காபிக்கு பதிலா இந்த பானங்கள் குடிக்கலாமே? ஆரோக்கியமா இருக்கலாம்ல

By Suganthi Rajalingam
Subscribe to Boldsky

காபியை தவிர்த்து நீங்க குடிக்க வேண்டிய ஆறு முக்கிய பானங்கள்

காலையில் எழுந்து ஒரு கப் காபி குடிக்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருக்காது. உலகம் முழுவதும் காபி விரும்பிகள் இருக்கிறார்கள்.

healthy drinks to replace coffee

காபியை குடித்து வருவதால் நரம்பியல் சார்பான நோய்களான அல்சீமர் நோய், பர்கின்சன் நோய், கல்லீரல் கரணை நோய், கீழ்வாதம், குடல் புற்று நோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. அதே நேரத்தில் இந்த காபியை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடலில் தீங்கும் விளைவிக்கிறது. பெண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்ட் அட்டாக், சீரணமின்மை, தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 மில்லி லிட்டர் காபியில் 92 மில்லி கிராம் அளவு பொட்டாசியம், 0.7 மில்லிகிராம் நியசின், 0.05 மில்லி கிராம் மாங்கனீஸ், 8 மில்லி கிராம் மக்னீசியம், 0.01 மில்லி கிராம் ரிபோப்ளவின் போன்றவை அடங்கியுள்ளன.

எடுத்துக் கொள்ளும் அளவு

எடுத்துக் கொள்ளும் அளவு

ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் (4 கப் பிற்கு) அதிகமாக காபியை குடிக்காதீர்கள். அதிகமாக காபியை எடுத்துக் கொள்வது ஏன் இறப்பை கூட ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

நீங்கள் அதிகமான அளவு காபி எடுத்துக் கொண்டு இருப்பதற்கான அறிகுறிகள்

அனெக்சிட்டி

அதிகப்படியான இதயத் துடிப்பு

குமட்டல்

வேர்த்தல்

இதயம் செயலிழப்பு

இன்ஸோமினியா

தூக்கமின்மை

அமைதியற்ற நிலை

நரம்பு தளர்ச்சி

காபிற்கு பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள்

காபிற்கு பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள்

டான்டெலியன் வேர் டீ

நீங்கள் காபியை மிகவும விரும்பினால் அதை ஆரோக்கியமாக மாற்ற காபியின் அளவை குறைத்து விட்டு டான்டெலியன் வேர் டீ போட்டு குடிக்கலாம். இதனால் நமக்கு விட்டமின் ஏ, பி, சி மற்றும் டி, இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

மோச்சா க்ரீன் டீ

மோச்சா க்ரீன் டீ

மோச்சா க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குளோரோபைல் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ்க்கு உதவுகிறது. மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள சிறுதளவு காஃபைன் உங்களை உற்சாகமாக வைக்கவும் உதவுகிறது.

மசாலா சாயா

மசாலா சாயா

இது ஒரு புகழ்பெற்ற இந்திய பானம் ஆகும். இதுவும் காபியை போலவே உங்களுக்கு நல்ல எனர்ஜியை தரக் கூடியது. மேலும் இந்த சாயாவில் ஏலக்காய், பட்டை, சாதிக்காய், கிராம்பு, இஞ்சி போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து தயாரிக்கின்றனர். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காய்ச்சல், ப்ளூ போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மஞ்சள் டீ

மஞ்சள் டீ

இதிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பார்ப்பதற்கு கோல்டன் கலரில் நல்ல நறுமணத்துடன் இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அழற்சியை போக்குகிறது. ஆர்த்ரிட்டீஸ், புற்று நோய், அல்சீமர் நோய் போன்றவற்றை தடுக்கிறது. கல்லீரல் பாதிப்பு, பித்தப்பை கற்கள் உடையவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஹாட் சாக்கோ

ஹாட் சாக்கோ

உங்கள் நாளை சுறுசுறுப்பாக தொடங்க இது ஒரு சிறந்த பானமாகும். இதில் நியூரோடிரான்ஸ்மிட்டரான அனாமைடின் உள்ளது. இது நமது மூளையையும் நரம்புகளையும் சுறுசுறுப்பாக்கி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க உதவுகிறது. மேலும் இதில் மக்னீசியம் சத்தும் உள்ளது.

ஹாட் மெக்கா

ஹாட் மெக்கா

இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது. இதை லட்டஸ் மற்றும் ஸ்மூத்திகளில் சாப்பிடலாம். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு ஹார்மோன் சமநிலையாக இருக்கவும் உதவுகிறது. இனி அதிகப்படியான காபி பருகுவதை தவிர்த்து இந்த ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வளமுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    healthy drinks to replace coffee

    Coffee helps in shooing away our drowsiness & energises us but drinking too much of it can lead to caffeine overdose which can even lead to death in severe cases. Make sure you don't have more than 400 mg of caffeine (4 cups) in a day. You can switch to these healthy drinks instead - dandelion root coffee, matcha green tea,
    Story first published: Monday, September 10, 2018, 18:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more