Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்?
ராகி சிறு தானியங்களைப் பற்றிய நிறைய நன்மைகளைப் பட்டியலிடுகிறோம். அதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. எனனதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முடைய வயல்களில் சிறுதானியங்கள் பயிரிடப்படுவதில்லை. ஏன் நாம் சிறு தானியங்கள் விளைவித்த பல நிலங்கள் இன்று கட்டடங்களாக மாறிவிட்டன. நம் வீட்டில்இருநு்த தானியங்களை இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்கி, மில்லட்ஸ் என்று கௌரவமாக சாப்பிடுகிறோம்.

சரி. அந்த கதையெல்லாம் விட்டுவிட்டு சிறு தானியங்களில் மிக முக்கியமான பயிரான ராகி எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டது. அது உடலுக்கு எவ்வளவு நன்மையைத் தரக்கூடியது என்று இப்போது பார்க்கலாம்.

ராகி எனும் கேழ்வரகு
சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ஒன்று தான் ராகி. ஆனால் ராகியை நிறைய பேருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது அவ்வளவு சுவை மிக்கது அல்ல. அதிலும் குறிப்பாக, நம்முடைய முன்னோர்களின் சமையல் முறைப்படி பார்த்தால், அவர்கள் செய்யும் ராகி களியை நம்மால் சாப்பிடவே முடியாது. அதை கடித்தோ மென்றோ சாப்பிட முடியாது. விழுங்கதான் வேண்டும். இதனாலேயே பலருக்கும் ராகி களியைப் பிடிக்காது.

உடல் வெப்பம்
ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

உடல் வலிமை
உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

எடையைக் குறைக்கும்
அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும். அப்படி காலையில் ராகி உருண்டை சாப்பிடுவதனால், அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்.

எலும்புகளின் வலிமை
ராகியில் உள்ள அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எப்போதும் சீராக ரத்த அழுத்தத்தையும் வைத்திருக்கச் செய்யும்.

கொலஸ்ட்ரால்
ராகி உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ராகியில் அதிக அளவில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதிலுள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும்.

ரத்த சோகை
ராகியில் அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் இருப்பதால் இது ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை ஏற்படுத்துவதைத் தடுக்கிறது. வேலைப்பளு நிறைந்தவர்கள் ராகியை அதிகம் சாப்பிட மன அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகின்றவர்கள் அடிக்கடி ராகியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

தைராய்டு
தைராய்டு பிரச்சினை இருக்கின்றவர்களுக்கு மிக நல்லது ராகி. குறிப்பாக, ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.

பால் சுரப்பு
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ராகி மிக நல்லது. பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி ராகியை உணவில் எடுத்துக் கொள்வதால், உடலுக்குள் இருக்கின்ற சிவப்பணுக்களின் அளவினை அதிகரிக்கும். பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.



Click it and Unblock the Notifications