Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
ஆண்களே, நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்கள் விந்தணு குறைபாட்டிற்கு காரணம்..!
அன்றாடம் நாம் உண்ணும் உணவு முதல் உறங்கும் பழக்கம் வரை, விந்தணுவை பாதிக்கின்றது.
ஒரு உயிரினம் இந்த பூமியில் உருவாக வேண்டும் என்றால் அதற்காக இரு உயிர்களும் இணைய வேண்டும். எந்த ஒரு ஜீவ ராசியாக இருந்தாலும் இதுதான் இயல்பான நிகழ்வாக நடக்கும். மற்ற உயிரினத்தை போன்றுதான் மனிதனுக்கும் இது நடைபெறுகிறது. ஆனால், இன்று பல ஆண்களும் பெண்களும் இந்த குழந்தை இன்மை பிரச்சினையால் பல வகையாக பாதிக்கபடுகின்றனர். அதிலும் பெண்கள் ஒரு புறத்தில் கர்ப்பப்பை கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு என்று இருந்தால்... மறு பக்கம் பெரும்பாலான ஆண்களை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது இந்த விந்தணு குறைபாடு.

இது சாதாரண வகையில் உருவாவது இல்லை. அன்றாடம் நாம் உண்ணும் உணவு முதல் உறங்கும் பழக்கம் வரை, விந்தணுவை பாதிக்கின்றது. இந்த பதிவில் எந்தெந்த உணவு பொருட்களை ஆண்கள் உண்டால் அது அவர்களின் விந்தணு குறைபாட்டிற்கு வழி வகுக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விந்தணு குறைபாடு- பெரும்பாடு...!
உலக அளவில் 20 முதல் 30 சதவிகித ஆண்கள் இந்த விந்தணு பிரச்சினையால் பாதிக்க பட்டுள்ளனர். பெண்ணின் கரு முட்டையின் ஒரு விந்தணு தாம்பத்தியத்தின் போது உள்நுழைந்தால்தான் அது ஒரு கருவை உருவாக்கும். அந்த வகையில் உட்செல்லும் விந்தணுவானது கட்டாயம் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். அவற்றின் சத்து குறைந்தால், அது கரு முட்டையில் கருவை உருவாக்க இயலாது.

எதனால் ஏற்படுகிறது..?
பொதுவாக எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் அதற்கென்று சில காரணங்கள் இருக்கத்தான் செய்யும். அதாவது, இந்த விந்தணு குறைபாடு ஏற்படவும் முதன்மையான காரணிகள் உள்ளன. பரம்பரை ரீதியாக, ஹார்மோன்களின் குறைபாடு, எடுத்து கொள்ளும் மாத்திரையின் வீரியம், உட்கொள்ளும் உணவின் தன்மை, கதிர்வீச்சு, பிறப்புறுப்புகளில் தொற்றுகள், பருவமடைதலில் பிரச்சினை... இவையே மூல காரணமாக ஆராய்ச்சியாளர்களலால் சொல்லப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட கடை உணவுகள்...
நம் எல்லோருக்கும் கடைகளில் விற்கப்படும் விதவிதமான உணவுகள் என்றவுடனே சாப்பிட தோன்றும். ஆனால், அவை எத்தனை நாட்கள் பதப்படுத்தப்பட்டது என்பதை நாம் அறியாமலேயே அவற்றை சாப்பிடுவோம். குறிப்பாக இறைச்சி, மீன், அவற்றால் தயாரித்த பண்டங்கள் போன்றவற்றை அதிக நாள் கடைகளில் பதப்படுத்தி விற்கின்றனர். இதை சாப்பிட்டால் விந்தணுவின் எண்ணிக்கையை குறைத்து விடும்.

வேதி காய்கறிகள், பழங்கள்..!
Non-organic foods என்று கூறப்படும் உணவுகள்தான் மிகவும் மோசமான உடல் கேடுகளை கொடுக்கிறது. இயற்கையான முறையில் உணவுகளை தயாரித்தால் அது கட்டாயம் எந்த வகையிலும் பாதிக்காது. அதிக பூச்சிக்கொல்லிகள், ராசயனங்கள் இவற்றில் கலப்பதால் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி விந்தணுக்களை அழிக்கிறது. எனவே இயற்கை முறையில் பயிர்செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களையே உண்ணுங்கள்.

பால் பொருட்கள்...
நம் எல்லோருக்கும் பால் என்றால் அதிக பிரியம்தான். ஆனால் இவற்றில் இருந்து தயாரிக்கும் சில பொருட்களை உண்டால் அது விந்தணுவின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். கொழுப்புக்கள் நீக்கப்படாத பால், வெண்ணெய், பாலாடை கட்டி போன்றவற்றில் நிறையுறாத கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை விந்தணுவின் செயல்பாட்டை முழுமையாக குறைத்து விடுகிறதாம்.

இனிப்பு வைக்கும் ஆப்பு..!
சர்க்கரையை உணவில் அதிகம் எடுத்து கொண்டாலே அது உடலின் நலனை கெடுக்கும். குறிப்பாக அவற்றை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால் விந்தணுவை பாதிக்குமாம். அதாவது, செயற்கை முறையில் உருவான குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள் போன்றவை சர்க்கரையின் அளவை உடலில் உயர்த்தும். இதனால் உடலின் ஆரோக்கியம் சீர்கேடு அடையும்.

காஃபி வேண்டாமே..!
காஃபி பிரியர்கள் பத்தில் 6 பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இது அவர்களின் மிகவும் பிரியமான ஒன்றாகவே மாறி விட்டது. அதிகமாக காஃபி அருந்துவதால் உற்பத்தி செல்களை பாதிக்க செய்கிறது. இதனால், விந்தணுக்கள் உற்பத்தி குறைந்து விடும். எனவே ஒரு நாளைக்கு 2 கப் காஃபியே போதுமானது.

ஜங்க் உணவுகள்...
எந்த ஒரு ஜங்க் உணவாக இருந்தாலும் அதில் அதிக படியாக வேதி பொருட்களை சேர்ப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜங்க் உணவுகளில் சர்க்கரை, கொழுப்புகள், கொலஸ்ட்ரால் நிறைய இருக்கும். இது விந்துகளின் ஆரோக்கியத்தை பாதித்து, உற்பத்தியை குறைத்து விடும்.

மெர்குரி மீன்கள்..!
கடல் உணவுகள் உடலுக்கு நல்லது என்ற வார்த்தை இப்போது முற்றிலுமாக மாறி வருகின்றது. ஏனெனில், கடலில் மெர்குரியின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை மீன்கள் உண்பதால் அவை முழுமையாக விஷமாக மாறி விடுகிறது. அதிகமாக கடல் உணவுகளை உண்ணும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி தடை பெரும். அத்துடன் உடல் ஆரோக்கியமும் கெடும்.

புகையும் மதுவும்..!
புகை பழக்கமாக இருந்தாலும், மது பழக்கமாக இருந்தாலும் இவை இரண்டுமே உடல் நலனை கெடுக்க கூடியதுதான். புகை பழக்கம் விந்தணுவை முற்றிலுமாக அழிக்க கூடிய ஒன்றாகும். பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட இதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
