Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
தயிர் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வேகமா புளிக்காம இருக்க என்ன செய்யணும்?
தயிர் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தயிர் யாருக்குத்தான் பிடிக்காது. தயிர் என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அரிய மருந்து. பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நமக்குத் தெரியும். அத்தகைய பாலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தயிரானது, சாப்பிடுகிறவரை மிக எளிதில் ஜீரணமாக்கும்.

நாம் பால் அதிகமாகச் சாப்பிடுவதற்குக் காரணம் அதில் உள்ள அதிகப்படியான கால்சியம் மற்றும் புரதம், வைட்டமின் பி ஆகியவற்றால் தான். இதிலுள்ள கால்சியமும் புரதமும் தான் நம்முடைய உணவை மிக வேகமாக ஜீரணமடையச் செய்கிறது.

ஜீரண சக்தி
நாம் குடிக்கும் பாலானது ஜீரணமடைய கொஞ்சம் நேரம் அதிகமாகும். நாம் அருந்தும் பாலானது ஒரு மணி நேரத்தில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு (30 சதவீதம்) அளவு தான் ஜீரணமடையும். ஆனால் நாம் சாப்பிடும் தயிரானது அதே ஒரு மணி நேரத்தில் கிட்டதட்ட 90 சதவீதத்துக்கும் மேல் ஜீரணமாகிவிடும்.

உடல் எடை அதிகரிப்பு
தயிரில் அதிக அளவில் கொழுப்பு இருக்கிறது. அதனால் தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதற்கு பயந்து கொண்டே நிறைய பேர் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் தயிரை அளவோடு நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கூடாது. அதனால் பயப்படாதீர்கள்.

என்ன தயிர் வாங்க வேண்டும்?
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் நம்முடைய வீட்டிலேயே பசும்பாலில் தயிர் உறைய வைத்து, பசுந்தயிர் செய்வார்கள். அது சரியான அளவில் புளிக்க வைக்கப்பட்டு ஃபிரஷ்ஷாக நமக்குக் கிடைக்கும். ஆனால் தற்சமயமோ அதற்கெல்லாம் நமக்கு நேரமும் இல்லை.
தற்போது கடைகளில் தயிர் பாக்கெட்டுகளில் தான் நமக்குக் கிடைக்கின்றன. இந்த தயிர் பாக்கெட்டுகளில் புரதத்தைத் தனியாக உறிஞ்சிவிட்டு, குறைந்த புரத அளவில் உள்ள தயிர் தான் நமக்குக் கிடைக்கிறது. முழு புரதத்துடன் கூடிய புரோட்டீன் நிறைந்த ரிச் புரோட்டீன் தயிர் தனித்த விலையில் கிடைக்கிறது. அதனால் தயிர் பாக்கெட்டுகள் வாங்குகின்ற பொழுது, ரிச் புரோட்டீன் என்று இருப்பதையோ அதனுடைய ஊட்டச்சத்துக்களின் பட்டியலில் புரோட்டீனின் அளவு 15 முதல் 18 கிராம் அளவுள்ளதாகப் பார்த்து வாங்குங்கள்.

தயிருடன் சேர்த்து சாப்பிடும் உணவுகள்
மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், தயிர் சாப்பிடுகிற பொழுது, நாம் கூட என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நம்மில் பல பேருக்கு நல்ல தயிர் சாதம் சாப்பிடுகிற பொழுது, மொறுமொறுவென உருளைக்கிழங்கு சிப்ஸோ அல்லது கிரிஸ்பியான உருளைக்கிழங்கு வறுவலோ தான் தேடுவோம். சிலருக்கு மசாலா சுர்த்த வேர்க்கடலையோ அல்லது ஊறுகாயோ இருக்க வேண்டும். ஆனுால் தயிர் சாப்பிடுவதால் எடை கூடுகிறது என்று புலம்புவர்கள் இந்த சைடிஷ்களை முதலில் தவிர்க்க வேண்டும்.

அதிகம் புளிக்காமல் இருக்க
குளிர்காலத்தில் தயிர் அவ்வளவாகப் புளிப்பு சீக்கிரத்தில் ஏறாது. ஆனால் வெயில் காலத்தில் ஒரே நாளில் புளித்துவிடும். தயிர் நன்கு தோய்ந்த பின்னர் தான் சாப்பிட வேண்டும். இல்லையென்ற சீரண கோளாறு பிரச்சினை வரும்.
தயிர் இரண்டு மூன்று நாட்களுக்குக் கெட்டுப் போகாமலோ அதிகமாகப் புளிக்காமலோ இருக்க வேண்டுமானால், அதில் சிறிய துண்டு தேங்காயை தயிருக்குள் போட்டு வைத்தால் சீக்கிரம் புளிப்பு ஏறாது.



Click it and Unblock the Notifications











