நமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

செலினியம் சத்து நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்து. இது விட்டமின் ஈ உடன் இணைந்து செயல்பட்டு நமது உடலை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து காக்கிறது. மேலும் இந்த செலினியம் தான் அயோடின் சத்துக்கு உறுதுணையாக இருந்து நமது உடல் மெட்டா பாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. இந்த செலினியம் தாது விட்டமின் சி சத்தை மறுசுழற்சி செய்து நமது உடலின் ஒட்டுமொத்த செல்களின் கட்டமைப்பை பாதுகாக்கிறது.

செலினியம் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் மாதிரி செயல்பட்டு குளுதாதயோன் என்ற பொருளை உருவாக்குகிறது. இது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியமான செல்லுலார் கூறுகளை தனி மூலக்கூறுகள், கனமான தாதுக்கள் மற்றும் லிப்பிட் பெராக்சைடு பாதிப்பிலிருந்து காக்கிறது.

உங்கள் உடலில் போதுமான செலினியம் தாது இல்லாவிட்டால் தைராய்டு கோளாறுகள், ஆண் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மை, மன அழுத்தம், இதய நோய்கள், வலிமை குறைந்த நோயெதிர்ப்பு மண்டலம், புற்று நோய் அபாயம் போன்றவை ஏற்படுகிறது.

மேலும் இந்த தாது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தைராய்டு சுரப்பி மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. எனவே செலினியம் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது நமக்கு நல்லது.

சரி வாங்க செலினியம் அடங்கிய உணவுகள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

எல்லாருக்கும் தெரியும் முட்டையில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது என்பது. அதே மாதிரி முட்டையில் செலினியம் தாதுவும் அடங்கி உள்ளது. 1 பெரிய அளவு முட்டையில் 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இந்த அளவு தினசரி தேவையில் 21 %ஆகும். இதைத் தவிர முட்டையில் பாஸ்பரஸ், விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் ரிபோப்ளவின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

காளான்

காளான்

பூஞ்சை காளானில் அதிக அளவு செலினியம் சத்து உள்ளது. 100 கிராம் காளானில் 11.9 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. தினசரி அளவில் இது 17% ஆகும். மேலும் இதில் நியசின், காப்பர், பொட்டாசியம், ரிபோப்ளவின், விட்டமின் டி மற்றும் சி போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

சீஸ்

சீஸ்

பால் சம்பந்தப்பட்ட பொருளான சீஸில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் சீஸில் கிட்டத்தட்ட 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 20% ஆகும். செலினியத்தை தவிர இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ போன்றவைகளும் உள்ளன.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

6-8 பிரேசில் நட்ஸில் 544 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 100% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இதில் 30% நார்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், போன்றவைகள் உள்ளன. ஆனால் இது அதிக கலோரி என்பதால் குறைந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸிலும் அதிக அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் ஓட்ஸில் 34 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. மேலும் இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், குறைந்த கொழுப்பு, மற்றும் நல்ல சேச்சுரேட் கொழுப்புகளும் அடங்கியுள்ளன.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டின் கல்லீரலில் அதிகப்படியான செலினியம் உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 91.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது ஒரு தினசரி தேவையான அளவில் 131% ஆகும். மேலும் மாட்டிறைச்சியில் பாஸ்பரஸ், காப்பர், இரும்புச் சத்து, போன்றவைகளும் உள்ளன. ஆனால் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் இதை குறைத்து சாப்பிடுவது நல்லது.

சிக்கன்

சிக்கன்

சிக்கன் புரதச் சத்து மற்றும் செலினியம் அடங்கிய அற்புதமான உணவு. 100 கிராம் சிக்கனில் 27.6 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 39% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் சிக்கனில் நியசின், விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் உள்ளன.

டூனா

டூனா

டூனா மீனில் அதிக அளவில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் டூனா மீனில் 80.4 மைக்ரோ கிராம் செலினியம் தாது உள்ளது. இதுவே நமது தினசரி தேவையில் 115% பூர்த்தி செய்கிறது. மேலும் டூனா மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், குறைந்த கலோரிகள், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனிலும் நிறைய அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் சால்மன் மீனில் 41.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 59% ஆகும். கலோரிகள் இல்லாத இந்த மீனில் குறைந்தளவு கார்போஹைட்ரேட், அதிக அளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் உள்ளன.

வான்கோழி இறைச்சி

வான்கோழி இறைச்சி

வான்கோழியில் புரோட்டீன் மற்றும் செலினியம் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் வான்கோழி கறியில் 22.8 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 33% ஆகும். இதில் மேலும் குறைந்த அளவு சேச்சுரேட் கொழுப்பு, கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான பாஸ்பரஸ், ரிபோப்ளவின் அடங்கியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள்

Selenium is a trace mineral that works along with vitamin E to help prevent oxidative damage in the body. Selenium also plays a major role in helping iodine, which is another vital mineral to regulate metabolism. Selenium aids in recycling the vitamin C in the body for improving the overall cellular protection.
Story first published: Saturday, March 3, 2018, 14:30 [IST]