ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ரெட் பீன்ஸ் பற்றித் தெரியுமா ?

Posted By:
Subscribe to Boldsky

ரெட் பீன்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிகப்பு காராமணி என்றும் கிட்னி பீன்ஸ் என்றும் இதனை அழைக்கிறார்கள். இதற்கென்ற தனி சுவையை கொண்டிருக்கும் இந்த வகை பீன்ஸ் கிட்னி வடிவத்தில் இருக்கும்.

இதில் பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு மற்றும் ப்ரோட்டீன் நிறைந்திருக்கிறது.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான சிறந்த மாற்று உணவு இது. அதோடு இது பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராடிடும் ஆற்றலையும் கொண்டது.

Surprising benefits of red beans

இதைத் தாண்டி இந்த ரெட் பீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் :

புற்றுநோய் :

இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓரு நோய் என்றே சொல்லலாம்.இதில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் இருக்கும் செல்களை பாதுகாக்கிறது. இதில் விட்டமின் கேவும் இருப்பதால் ஆக்ஸிடேடிவ் ஸ்டரஸிலிருந்தும் இது நம்மை காப்பாற்றுகிறது.

மூளையின் செயல்பாடுகள் :

மூளையின் செயல்பாடுகள் :

நம் மூளையின் செயல்பாடுகளும் நரம்புகளுக்கும் விட்டமின் கே மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஸ்பிங்கோ லிப்பிட்ஸ் முறையாக உருவாவதற்கு இந்த ரெட் பீன்ஸ் உதவுகிறது.

அதோடு இதில் அதிகப்படியாக தையமைன் இருப்பதால் அவை மூளையின் செல்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற உதவிடுகிறது. acetylcholine உற்பத்தி செய்து நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது.

ரத்தச் சர்க்கரையளவு :

ரத்தச் சர்க்கரையளவு :

ரெட் பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிருக்கிறது. இது கார்போஹைட்ரேட்டின் மெட்டபாலிசத்தை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.

உணவு சாப்பிட்ட உடனேயே ரத்தச் சர்க்கரையளவு கூடுவதை இது தடுக்கிறது. அதோடு இதில் கணிசமான அளவு ப்ரோட்டீனும் இருப்பதால் அவை ரத்தச் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடுகிறது.

செரிமானம் :

செரிமானம் :

ரெட் பீன்ஸ் விரைவில் செரிமானம் ஆகிடும். இதில் இருக்கும் சத்துக்கள் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியா உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. அதோடு உடலில் சேரக்கூடிய நச்சுக்களையும் சீக்கிரமே வெளியேற வைக்கிறது. இதனால் பிற நோய்கள் எதுவும் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.

இதயம் :

இதயம் :

இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவிடுகிறது.இதிலிருக்கும் ஃபோலேட் என்ற சத்து நம் உடலில் homocysteine உற்பத்தியை குறைக்கிறது.

இதனால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிகிறது.அதோடு கார்டியோவஸ்குலர் சிஸ்டம் முறையாக வேலை செய்ய உதவிடுகிறது.

எனர்ஜி :

எனர்ஜி :

சிகப்பு பீன்ஸிலிருந்து அதிகப்படியாக இரும்புச்சத்து நமக்கு கிடைக்கிறது. உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கவும், நம்முடைய எனர்ஜிக்கும் இது கண்டிப்பாகத் தேவை.இதிலிருக்கும் மக்னீசியம் கூட நாம் உற்சாகமாக இருக்க உதவிடுகிறது.

எலும்புகள் :

எலும்புகள் :

ரெட் பீன்ஸில் இருக்கக்கூடிய மக்னீசியம் மற்றும் கால்சியம் கண்டண்ட் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.அதோடு எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.இதிலிருக்கும் ஃபோலேட் எலும்புகளை வலுவாக்கிறது.

அதோடு இதில் ப்ரோட்டீன் அதிகமிருப்பதால் அசைவ உணவு சாப்பிடாதவர்கள்,அசைவத்திற்கு மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அதோடு டயட் என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவகளும் இதனை உங்கள் உணவில் சேர்க்கலாம் சிறந்த மாற்றாக இருக்கும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

ரெட் பீன்ஸில் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸுடன் கூடிய கார்போஹைட்ரேட் இருக்கிறது.இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.

இதிலிருக்கும் Fibernya ஒரு வகை அமிலத்தை உருவாக்கும். இது கல்லீரலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்திடும். இதனால் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கலாம்.

ஆஸ்துமா:

ஆஸ்துமா:

மக்னீசியம் நிறைந்த இதனை எடுத்துக்கொள்வதால் bronchio-dilating என்ற எஃபக்ட் நமக்கு கிடைக்கிறது.இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும். நம் உடலில் மக்னீசியம் சத்து குறைந்திருந்தால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.

அதோடு இது சோர்விலிருந்தும் நம்மை மீட்கிறது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

ரெட் பீன்ஸில் இருக்கக்கூடிய டயட்ரி ஃபைபர் ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவிடுகிறது. பைல் அமிலங்கள் கொலஸ்ட்ரால் படிவதை அறவே தடுக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வர உதவிடுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி :

நோயெதிர்ப்பு சக்தி :

இந்த ரெட் பீன்ஸில் அடிப்படைகளான எட்டு அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடுகிறது.அதோடு இதிலிருக்கும் ஏராளமான சத்துக்கள் பிற நோய்கள் எதுவும் எளிதாக நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

கண் பிரச்சனை :

கண் பிரச்சனை :

ஒரு நாளைக்கு ஒரு கப் ரெட் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அது நம் உடலுக்கு தேவையான ஜிங்க் கொடுத்திடும். இது கண்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

நம் உடலில் போதிய அளவு ஜிங்க் இருந்தால் மட்டுமே அவை கண் தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது.இது வயதான பிறகு ஏற்படக்கூடிய காட்ராக்ட் வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.

அல்சைமர் :

அல்சைமர் :

இந்த ரெட் பீன்ஸில் நிறைய விட்டமின் பி இருக்கிறது. இது மூளை வளர்ச்சிக்கும்,மூளையில் இருக்கக்கூடிய செல்களுக்கும் அவசியமான ஒன்று.இது மூளையின் செயல்பாடுகளை துரிதமாக்குகிறது. அதோடு வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் நோயிலிருந்தும் நம்மை காத்திட உதவுகிறது.

சருமம் :

சருமம் :

நம் உடலில் மேகொள்ளக்கூடிய அமினோ ஆசிட் மெட்டபாலிசத்திற்கு ரெட் பீன்ஸ் பெரிதும் உதவிடுகிறது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு கண்டிப்பாக தேவை.அதோடு இதிலிருக்கும் ஜிங்க் சருமத்தில் இருக்கக்கூடிய செபாஸியஸ் சுரப்பி சரியாக பணியாற்ற உதவிடுகிறது.

இது சரியாக செயல்பட்டால் மட்டுமே நம் சருமத்தில் சேரும் அழுக்குகள் வியர்வையாக வெளிவரும்.அதோடு இது நம் முகத்தில் கரும்புள்ளி தோன்றுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. ரெட்பீன்ஸில் இருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம் சருமத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் பருக்களை குறைக்கவும் உதவிடுகிறது.

தலைமுடி :

தலைமுடி :

இந்த ரெட் பீன்ஸில் பயோட்டின்,ப்ரோட்டின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் அவசியமாகும்.

நம் உடலில் பயோட்டின் குறையும் நகம் மற்றும் முடி வரண்டு எளிதாக உடைவதும் வேகமாக உதிர்வதும் தொடரும். அதற்கு ரெட் பீன்ஸ் சிறந்த மாற்றாக அமைந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising benefits of red beans

Surprising benefits of red beans
Story first published: Monday, November 27, 2017, 10:43 [IST]