உங்க கிச்சன்ல இருக்கிற பொருட்கள் எத்தனை வகையான புற்று நோயை தடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நவீன வாழ்க்கை முறை நம்மிடையே கொண்டு வந்த மாற்றங்களும் தவறான உணவுப் பழக்கமும்தான் புற்று நோயாக மாறுகிறது. புற்று நோயைப் பற்றி விழுப்புணர்வு வந்தாலும் அதனை தடுப்பதற்கான சரியான வழிகளை நாம் தேடுவதில்லை.

நமது அஞ்சறைப் பெட்டியில் உள்ள லவங்கம், பட்டை, சீரகம், தனியா, மஞ்சள் போன்றவை வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல; புற்றுநோயைத் தடுக்கும் போர்வீரர்கள்.

Secrete of Spices that how prevent cancer cells

அவற்றை தினமும் சேர்த்துப் பாருங்கள். நோய்கள் ஓடிப்போகும். நாள்தோறும் சமையலில் ஒரு சிட்டிகை, அரை டீஸ்பூன் என்ற அளவிற்கு இந்த மணமூட்டிகளை சேர்த்தால் போதும். உடல் ஆரோக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனியா :

தனியா :

உடலில் இருக்கும் கிருமிகளை அழித்து, உணவால் உருவாகும் நோய்களைத் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, பித்தநீர் வெளியேறத் தூண்டுகிறது. இதனால், பெருங்குடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கப்படுகிறது.

 லவங்கம் :

லவங்கம் :

லவங்கம்நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் லவங்கத்துக்கு உண்டு. தொடக்க நிலை எனில், புற்றுநோய் செல்களை மேலும் பரவாமல் அழிக்கும். இதை, ‘கீமோ ப்ரிவென்டிவ்' என்றே சொல்வதுண்டு.

சீரகம் :

சீரகம் :

சீரகம் சிறப்பு செரிமானத்தைச் சீராக்குவதுடன் புற்று நோயையும் தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதில் உள்ள கியூமினால் டிஹைட் எனும் சத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மிளகு :

மிளகு :

மிளகு மிரட்டல்மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களைத் தடுக்கும். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். இது, மஞ்சளோடு சேரும்போது பலன் இரட்டிப்பாகும். பைப்பரின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் ஆன்டிஇன்ஃபிளாமேட்டரியாகவும் செயல்படுகிறது.

பட்டை :

பட்டை :

பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

சுக்கு :

சுக்கு :

பெருங்குடல், மலக்குடலில் புற்றுநோய் செல்கள் தோன்றுவதையும் பரவுவதையும் தடுக்கிறது. சினைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

 அதிமதுரம் :

அதிமதுரம் :

அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகளைத் தீர்க்கும். ப்ராஸ்டேட், மற்றும் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

 மஞ்சள்:

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள ‘குர்குமின்' என்ற பாலிபினால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தினசரி உணவில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

ஜாதிக்காய் :

ஜாதிக்காய் :

வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ்,சி, ஃபோலிக் ஆசிட், பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஒரு சிட்டிகை அளவு சேர்த்தாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secrete of Spices that how prevent cancer cells

Secrets of Indian Spices that how prevent cancer cells,
Story first published: Friday, April 21, 2017, 9:00 [IST]