Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களின் ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கு காரணமான உணவுகள் எவை?
ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கு காரணமான உணவுகள் எவை மற்றும் அவ்ற்றை தடுக்க எந்த மதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் சற்று கவனம் செலுத்தி கட்டுப்பாட்டோடு இருந்தால் போதும் புரோஸ்டேட் புற்றுநோயை சரி செய்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? சில வகை உணவுகள் இந்த வகை புற்றுநோய்க்கு சிறந்தது. ஆனால், சில உணவுகள் மிகவும் ஆபத்தானவை.
இந்த வகை புற்றுநோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகமாக பாதிக்கும். பெரும்பாலும், இந்த நோய் 65 வயதை கடந்த ஆண்களையே தாக்குகிறது. மருத்துவ ஆலோசகர்கள் பலர் உணவு பழக்கத்தால் இதனை சரி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட உணவினை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்துவிட முடியாது. சிறந்த உணவு கட்டுப்பாட்டு முறையே இதற்குத் தீர்வு. சிறந்த புரதச்சத்துக்கள் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். மேலும், உடலுக்கு புத்துணச்சியை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இக்கட்டுரையில் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுப்பதற்கு கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியலும், சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் இப்போது நாம் அந்த உணவுகளைப் பற்றி விரிவாக பார்ப்பார்ப்போம்....

புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்:
இறைச்சியை யார் அதிகமாக சாப்பிடுகிறாரோ, அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது.
அதிலும் மாட்டிறைச்சியை உயர் வெப்பநிலையில் வேக வைக்கும் போது, அதனுள் ஏற்படும் ரசாயன எதிர்வினை புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
எனவே ஆண்கள் மாட்டிறைச்சியை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயதாகிவிட்டால், மாட்டிறைச்சியை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

பால் :
பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது உடலில் 1,25-டைஹைட்ராக்ஸி வைட்டமின் டி3 அளவைக் குறைக்கும். இந்த மூலக்கூறு ஆண்களின் உடலில் ஒரு பாதுகாப்பை வழங்கி, புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்க்கும்.

ஜிங்க் சப்ளிமெண்ட்டுகள்
ஆய்வு ஒன்றில், ஆண்கள் 100 மில்லிகிராமுக்கு அதிகமாக ஜிங்க் சத்தை எடுத்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்கஹால்
வாரத்திற்கு 20 டம்ளருக்கும் அதிகமான அளவில் ஆல்கஹாலை அருந்தினால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தை அதிகரிக்கும். ஆகவே புற்றுநோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், ஆல்கஹாலுக்கு குட்-பை சொல்வதே நல்லது.

புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் உணவுகள்:
தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபைன் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடச் செய்து, உடலைப் பாதுகாக்கும். லைகோபைன் என்பது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது தீங்கு விளைவிக்கும் மற்றும் நோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்கும்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் அதிகமாகவும் உள்ளது. இது உடலில் உள்ள செல்களின் மாற்றத்தால் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

சால்மன்
சால்மன் மீனில் உள்ள அதிகமான ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்றவை புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க உதவும். வேண்டுமானால் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரேசில் நட்ஸ்
புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் முக்கியமான கனிமச்சத்து தான் செலினியம். பிரேசில் நட்ஸில் செலினியம் ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு வேண்டிய அளவில் 700% அதிகம் உள்ளது.

வால்நட்ஸ்
வால்நட்ஸில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் இது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் உணவுகளுள் சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஆய்விலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் உள்ளதால், இது புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சிக்கான அபாயத்தைத் தடுக்கும்.

காபி
தினமும் 4-5 கப் காபியைக் குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இது சர்க்கரையை வளர்சிதை மாற்றம் புரிவது தான் காரணம்.

கேரட்
வாரத்திற்கு 3 முறை உணவில் கேரட்டை சேர்த்து வந்தால், 18% புரோஸ்டேட் புற்றுநோயின் வளர்ச்சி குறையும். இதற்கு காரணம் கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின் என்னும் கரோட்டினாய்டு உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைவது தான்.

மாதுளை ஜூஸ்
மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுக்கும். மேலும் மாதுளை புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதைத் தடுத்து, அந்த செல்களை பலவீனப்படுத்தும்.

சோயா
சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் இடையூறை ஏற்படுத்தி, உடலில் அதன் வளர்ச்சி, பரவும் தன்மை போன்றவற்றைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சோயாவை உணவில் சேர்த்து வருவதன் மூலம், புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
