சௌ சௌ வை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

By: Gnaana
Subscribe to Boldsky

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், மரங்கள் காய்கறி, பழங்கள் போன்ற, நிறைய மேலை நாட்டு தாவர வரவுகள், நமது தேசத்துக்கு வந்தன. அவையெல்லாம், அவர்களின் தேவைகளுக்காகவே, இங்கு வந்தன.

அந்த காய்கறி, பழ மர வகைகள் எல்லாம், நமது நாட்டில் அவை வளருவதற்கு ஏற்ற குளிர் பிரதேசங்களிலும் மற்றும் மலை வாசஸ்தலங்களிலும் பயிரிடப்பட்டன. அப்படி வந்த மேலை வகை தாவரங்களில், ஒன்றுதான், சௌ சௌ.

சாம்பாருக்கும், கூட்டுக்கும் தாய்மார்களின் விருப்பமான ஒரு காயாகத் திகழும் சௌ சௌ, தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மலைகள் மற்றும் மலை அடிவாரங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

Health benefits of chow chow vegetable to keep diseases away

கொடி வகையைச் சார்ந்த சௌ சௌ விதைகளை நிலத்தில் இட்டு, அவை முளைத்த பின் எடுத்து, வேறு இடங்களில் நட்டு வளர்க்கப் படுகின்றன. பந்தலில் படரும் கொடிகளில் இருந்து, விதைகளை எடுத்து, நட்ட மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கி, நான்காவது மாதத்தில் இருந்து, காய்த்து, ஓராண்டு வரை தொடர்ந்து காய்களைக் கொடுக்கும், தன்மை மிக்கது இந்த சௌ சௌ கொடி.

புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச் சத்தும் நிறைந்த சௌ சௌ காய்கள், சுவையான சமையல் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமல்ல, மனிதர்களுக்கு, சிறந்த வியாதி எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சௌ சௌ காயின் மருத்துவ நன்மைகள்.

சௌ சௌ காயின் மருத்துவ நன்மைகள்.

இரத்த அழுத்த பாதிப்புகள், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது. கருவுற்ற மகளிருக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்கும் காயாக, சௌ சௌ திகழ்கிறது.

நரம்பு தளர்ச்சி :

நரம்பு தளர்ச்சி :

உடல் தளர்ச்சிகளை போக்கி, தசைகளை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்ந்து, வயிற்று நச்சுக்களை நீக்கி, உடலை சரியாக்கும் தன்மை கொண்டவை. மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட வைத்து, குடல் பாதிப்புகளை சரியாக்குகிறது, சௌ சௌ.

கருவுற்ற மகளிரின் துயர் போக்கும்.

கருவுற்ற மகளிரின் துயர் போக்கும்.

கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் நீர் கோர்த்தது போன்ற வீக்கங்கள் ஏற்படும். இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வீக்கங்கள் வடிந்து விடும். மேலும், கருவில் உள்ள மகவையும், வியாதிகளின் தொற்றுக்களில் இருந்து காக்கக் கூடியது, சௌ சௌ.

தைராய்டு பாதிப்புகள் நீங்க

தைராய்டு பாதிப்புகள் நீங்க

தைராய்டு சுரப்பிகளின் பாதிப்பால் ஏற்படும் கோளாறுகள் விலக, சௌ சௌவை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, சௌ சௌவில் உள்ள தாதுக்களான, தாமிரம் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அரு மருந்துகளாக செயல் பட்டு, தைராய்டு பாதிப்புகளை உடலில் இருந்து விலக்கி, உடல் நலனை சரி செய்யும் ஆற்றல் மிக்கவை.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு.

சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப் படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும். குழந்தைகள் உணவில் சௌ சௌவை சேர்த்து வர, குழந்தைகள் ஊட்டமும், உடல் நலமும் பெறுவர்.

புற்று வியாதியைத் தடுக்கும் சௌ சௌ.

புற்று வியாதியைத் தடுக்கும் சௌ சௌ.

சௌ சௌவில் உள்ள ஆற்றல் மிக்க வைட்டமின் வேதிப் பொருட்கள், புற்று வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகளை, உடலினுள் நுழைய விடாமல் தடுப்பதில், ஆற்றல் மிக்கவையாகத் திகழ்கின்றன.

அனைத்து வயதினரும் சௌ சௌ காய்களை, உணவில் அவ்வப்போது சேர்த்து வர, கடுமையான வியாதிகள், உடலை அணுக விடாமல் தடுக்கலாம்.

 வயிற்றுக் கொழுப்புக் கரைப்பில் சௌ சௌ.

வயிற்றுக் கொழுப்புக் கரைப்பில் சௌ சௌ.

சிலருக்கு வயிறு மற்றும் இடுப்பில், அதிகமாகக் கொழுப்புகள் சேர்ந்து, நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும், அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை சரி செய்து, அதிகப்படியாக வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற, சௌ சௌ சூப் உதவி செய்யும்.

மனச் சோர்வை போக்கும் :

மனச் சோர்வை போக்கும் :

சிலருக்கு, இள வயதிலேயே, உடலில், முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, வயது முதிர்ந்த தோற்றத்தை உண்டாக்கி, அவர்களுக்கு, மனச் சோர்வை அளித்து விடும்.

அவர்கள், உணவில் அடிக்கடி சௌ சௌவை சேர்த்து சாப்பிட்டு வர, முகம் மற்றும் உடலில் இருந்த சுருக்கங்கள் எல்லாம் விலகி, உடல் பொலிவு பெறும்.

 கொழுப்பைக் கரைக்கும் சௌ சௌ சூப்

கொழுப்பைக் கரைக்கும் சௌ சௌ சூப்

வேக வைத்த சௌ சௌவை, தண்ணீரில் இட்டு சூடாக்கிக் கரைத்து, உப்பு, மிளகு சேர்த்து, சூப் போல தினமும் இரு வேளை பருகி வர, வயிற்றுக் கொழுப்புகள் கரைந்து, உடல் நலமாகும். இந்த சௌ சௌ சூப்பே, உடலுக்கு சிறந்த சக்தி தரும் பானமாகவும், பயன் தரும்.

இத்தகைய அற்புதப் பலன்கள் தரும் சௌ சௌவில் இருந்து வழக்கமாக வீடுகளில், சௌசௌ கூட்டு, சௌசௌ கார கறி, சௌசௌ துவையல் மற்றும் சௌசௌ பஜ்ஜி, அவியல், மோர்க்குழம்பு, சாம்பார் என்று பல பதார்த்தங்களைத் தயாரித்து, தாய்மார்கள் வீட்டினரை அசத்தி இருப்பார்கள்.

அவற்றில் சில வித்தியாசமான சுவை மிக்க, சமையல் குறிப்புகளை இங்கே காணலாம்.

சௌ சௌ கார சட்னி.

சௌ சௌ கார சட்னி.

துண்டுகளாக நறுக்கிய, சௌ சௌவை, சிறிது காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து, எண்ணை விட்டு வாணலியின் வதக்கியபின், சற்றுநேரம் கழித்து, இவற்றை புளி சேர்த்து அரைத்து, கடுகு ஜீரகம் கறிவேப்பிலை தாளித்து இட, சௌ சௌ கார சட்னி, சிற்றுண்டிகளுக்கு சுவை சேர்க்கும்,

சௌ சௌ வறுவல்

சௌ சௌ வறுவல்

சௌ சௌவை தோல் நீக்கி, மெலிதாக சீவி வைத்துக் கொண்டு, அத்துடன் சிறிது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து சற்று நேரம் ஊற வைத்த பின், வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, அதில் மிளகாய்த் தூளில் பிசைந்த சௌ சௌ சீவல்களை இட்டு, நன்கு வறுபட்டதும், மறுபக்கம் திருப்பி முழுமையாக வறுபட்டதும், ஒரு தட்டில் இட்டு குழந்தைகளுக்கு வழங்க, சுவையான அந்த மாலைத் தீனியை, குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

இந்த வறுவலுடன் புதினா அல்லது மல்லித் துவையலை தொட்டுக் கொண்டு உண்ண, நல்ல சுவையுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும், பெறலாம்.

சௌ சௌ பொரியல்.

சௌ சௌ பொரியல்.

வாணலியில் எண்ணை ஊற்றி சற்று சூடு வந்ததும், கடுகு, ஜீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து, பின்னர், காய்ந்த மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்த்து வதக்கிய பின், சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த சௌ சௌவை, வாணலியில் இட்டு, சற்று மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்புத்தூள் தூவி, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

சௌ சௌ வெந்ததும், பெருங்காயத் தூள் மற்றும் தேங்காய்த் துருவல்களை அதில் இட்டு, பின்னர், சௌ சௌ பொரியலை, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, புது வித சுவையுடன் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of chow chow vegetable to keep diseases away

Health benefits of chow chow vegetable to keep diseases away
Story first published: Thursday, December 7, 2017, 16:20 [IST]
Subscribe Newsletter