For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்?

வேர்கடலையின் ஆரோக்கிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

ஆண்மையை அதிகரிக்க பல மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை சாப்பிடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் ஆண்மையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இவை உதவுகின்றன.

வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவமாக இருந்தால் வேர்கடலையை சாப்பிடலாம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் அடங்கியுள்ளது.

ground nut health benefits

இந்த வேர்கடலையை ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வேர்கடலையை எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வேர்கடலை

1. வேர்கடலை

வேர்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.

2. கடலை எண்ணெய்

2. கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

3. பால்

3. பால்

பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.

4. ஆண்மை

4. ஆண்மை

வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.

5. மூட்டு வலி

5. மூட்டு வலி

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணையை சிறிதளவு பயன்படுத்துவதால் மூட்டு வலி அகலும்.

6. மூளை வேலை செய்ய

6. மூளை வேலை செய்ய

மூளை நன்றாக வேலை செய்ய வேர்கடலை மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.

7. வீக்கங்கள்

7. வீக்கங்கள்

வேர்கடலையை சாப்பிடுவது உடலில் காணப்படும் வீக்கங்களை குணப்படுத்த உதவுகிறது. எனவே இதனை நீங்கள் பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

8. சக்கரை நோய்

8. சக்கரை நோய்

சக்கரை நோய் உள்ளவர்கள் இந்த வேர்கடலையை சாப்பிடுவதினால், அவர்களுக்கு வரும் மாரடைப்பு பிரச்சனை குறைகிறது. இருதயத்தை பலப்படுத்த இது உதவுகிறது.

9. அழகை மேம்படுத்த

9. அழகை மேம்படுத்த

வேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.

10. புற்றுநோய் வராமல் தடுக்க

10. புற்றுநோய் வராமல் தடுக்க

வேர்கடலை புற்றுநோய் வராமல் தடுக்கவும், இருதயத்தை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்கவும் இது உதவுகிறது.

11. புரதசத்து

11. புரதசத்து

வேர்கடலையில் மாமிசத்தை விட அதிகளவு புரத சத்து இருப்பதால், இது புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ground nut health benefits

ground nut health benefits
Story first published: Monday, July 24, 2017, 15:48 [IST]
Desktop Bottom Promotion