சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

இந்த நவீன காலத்தில் நிறைய பாஸ்ட்புட் உணவுப் பழக்கங்கள் தான் எல்லார்களிடையும் காணப்படுகிறது. இதனால் நோய்களின் தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன. அதிகமான எண்ணெய் உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், மைதா மாவு உணவுகள் போன்றவை நமக்கு டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட அதிகமாக காரணமாகின்றன.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா உலகத்திலயே அதிகமான சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் தான் இருக்கின்றன. மேலும் இன்னும் அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த சர்க்கரை நோயால் தற்போது நிறைய பேர் இறக்கவும் செய்கின்றனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயாபெட்டீஸ் பொதுவாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் வருகிறது. நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் சர்க்கரையை குளுக்கோஸாக உடலில் மாற்றம் செய்கிறது.

Can You Eat Jaggery If You Are Suffering From Diabetes?

நமது உடலில் இன்சுலின் சுரப்பு நின்று விட்டாலோ அல்லது இன்சுலின் செயல்பாடு இல்லாவிட்டாலோ நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை குளுக்கோஸாக மாறுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை நமக்கு தீங்கு விளைவிக்கிறது.

இது நமது உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. இரத்த குழாயான தமனிகளை அடைத்தல், இதய திசுக்களை பாதித்தல், அதிக இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் மரணம் ஏற்படுகிறது.

டயாபெட்டீஸ் நோயாளிகள் கண்டிப்பாக அவர்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை உணவிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Can You Eat Jaggery If You Are Suffering From Diabetes?

ஆனால் நாம் என்ன சாப்பிட்டாலும் அதில் சர்க்கரை சத்து வேறு விதத்தில் அடங்கியுள்ளது.

எனவே நீங்கள் குறைவான கிளைசெமிக் இன்டஸ் உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்கு எந்த உணவு சீக்கிரம் சீரணிக்காமல் மற்றும் சர்க்கரையை இரத்தத்தில் உடனே அனுப்பாத உணவுகளை உண்ண வேண்டும்.

நமது நாட்டில் சர்க்கரை நோய் அதிகரிக்க காரணம் அதிகமான செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் மார்க்கெட்டில் அதிகரிப்பதே காரணம் ஆகும்.

எனவே செயற்கை இனிப்பு சுவையூட்டிகளுக்கு பதிலாக இயற்கை பொருட்களான வெல்லம், கருப்பட்டி மற்றும் தேன் போன்றவற்றை பயன்படுத்தலாமா என்பது கேள்வியாக உள்ளது.

ஜாக்கரி டயாபெட்டீஸ் நேயாளிகளுக்கு பாதுகாப்பானதா?

ஜாக்கரி கரும்புச் சாற்றை கொதிக்க வைத்து பெறப்படும் இனிப்பு வகையாகும். சர்க்கரை மற்றும் வெல்லம் (ஜாக்கரி) இரண்டும் கரும்பிலிருந்து தான் பெறப்படுகின்றன. ஆனால் சர்க்கரை அதிகமாக சுத்தரிப்பு செயல்கள் செய்து பெறப்படுகிறது.

ஜாக்கரி எந்த விதமான சுத்திகரிப்பும் செய்யப்படாததால் அதில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற பொருட்கள் உள்ளன. இவை கண்டிப்பாக நம்ம ஆரோக்கியத்திற்கு உள்ளது. ஆனால் சர்க்கரை போலவே இதுவும் நமது உடலில் அதே விளைவை தான் ஏற்படுத்தும்.

எனவே டயாபெட்டீஸ் நேயாளிகளுக்கு ஜாக்கரி அதிகமாக பரிந்துரைக்கப்படுவதில்லை. ஜாக்கரி ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதன் ஊட்டச்சத்து அளவுகளால் இதை டயாபெட்டீஸ் நோயாளிகள் கொஞ்சம் சர்க்கரைக்கு பதிலாக எடுத்து கொள்ளலாம்

டயாபெட்டீஸ் நோயாளிகள் சர்க்கரை மிகுந்த உணவுகளை இதன் மூலம் தவிர்த்து கொள்ளலாம்.

வெல்லத்தில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகள் சர்க்கரையை விட வித்தியாசமானது. ஒரு 10 கிராம் வெல்லத்தில் இருக்கும் கலோரியானது 38.3, இது 97% சர்க்கரையின் அளவிற்கு அடங்கும்.

இது உங்களுக்கு தாமதமான விழிப்புணர்வாக இருக்கலாம். இனி டயாபெட்டீஸ் நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.

Can You Eat Jaggery If You Are Suffering From Diabetes?

கொஞ்சம் வெல்லம் சேர்த்தாலும் 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பது நல்லது. இது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கரைத்து விடும். எனவே ஜாக்கரி சர்க்கரைக்கு பதில் நல்லது. எனவே இதை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

ஜாக்கரியின் நன்மைகள்

மலச்சிக்கலை தடுத்து நிறுத்திகிறது. சீரண என்ஜைம்களை செயல்படுத்துகிறது. இதனால் சீரண சக்தி மேம்படுகிறது.

அனிமிக்ஸ் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நிறைய இரும்புச் சத்து உள்ளது.

கல்லீரலின் செயலை துரிதப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இருமல் மற்றும் சளியை போக்குகிறது

எல்லாரும் வெல்லத்தை உணவு சாப்பிட்ட பிறகு சிறிய துண்டு சாப்பிடுவது நல்லது.

இதுவே டயாபெட்டீஸ் நோயாளிகள் வெல்லம் சாப்பிட்ட பிறகு மறக்காம உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

எனவே சரியான அளவில் எதையும் எடுத்துக் கொண்டு உங்கள் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுங்கள்.

English summary

Can You Eat Jaggery If You Are Suffering From Diabetes?

Can You Eat Jaggery If You Are Suffering From Diabetes?
Story first published: Monday, December 18, 2017, 19:03 [IST]