சர்க்கரை வியாதியை தடுக்கும் காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இப்போது பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக மாறிவருகிறது காளாண். இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இயற்கையாகவே வளரும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டதும் இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் காளாண் வகைகளில் சுமார் எட்டு வகைகளை தான் நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள் :

சத்துக்கள் :

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதயம் :

இதயம் :

காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்தம் :

ரத்தம் :

காளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.

குழந்தைகளுக்கு :

குழந்தைகளுக்கு :

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

உடல் தேற :

உடல் தேற :

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

காளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதே சமயத்தில் குறைந்தளவு தான் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிலிருக்கும் ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவிடுகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் ப்ரோட்டீனும் கொலஸ்ட்ராலை கரைக்க உதவிடும்.

ரத்த சோகை :

ரத்த சோகை :

ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் காளான் சாப்பிடலாம். காளானில் இரும்புச் சத்து அதிகமுண்டு.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

காளானில் கொழுப்பு இல்லை,கார்போஹைட்ரேட்டும் இல்லை. இதில் அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளாணில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of mushroom

Benefits of mushroom
Story first published: Tuesday, August 22, 2017, 17:29 [IST]
Subscribe Newsletter