Latest Updates
-
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை!
ஏன் சுத்திகரிப்பு செய்த வெள்ளை அரிசி, உப்பு, சர்க்கரை உட்கொள்ளக் கூடாது தெரியுமா?
நீங்களே சற்று யோசித்து பாருங்கள். 20 வருடங்களுக்கு முன்னர் இந்தளவு சர்க்கரை நோய் பாதிப்புகள் இருந்தனவா? இதய கோளாறுகள், இதய அறுவை சிகிச்சைகள், தனிப்பட்ட ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் இருந்ததா? 20 வருடங்களுக்குள் இவ்வளவு ஆரோக்கிய சீரழிவுகள் உண்டாக எவை காரணம்?
இயற்கை மரணம் அடைந்தார் என்ற செய்தியை நீங்கள் கடைசியாக கேட்டது எப்போது என்று நினைவிருக்கிறதா? நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகள் தான் பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிப்பு செய்த வெள்ளை அரிசி, சர்க்கரை, உப்பு. இவற்றுக்கும் மேற்கூறிய நீரிழிவு, இதய கோளாறுகளுக்கு என்ன தொடர்பு?
நாள்ப்பட உடலில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கி, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் தான் இவை....

வெள்ளை சர்க்கரை!
பொதுவாக வெள்ளை சர்க்கரை கரும்பு மற்றும் கிழங்கு வகை உணவுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதிலிருந்து சர்க்கரை எடுக்கும் போது 90% நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் வெளியேற்றப்படுகின்றன.

தயாரிப்பு முறை!
வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படும் போது அதில் கார்பன்டை ஆக்சைடு மற்றும் எலுமிச்சை சர்க்கரை ஜூஸில் சேர்க்கப்படுகின்றது. கொழுப்பு முழுமையாக நீக்க இதை செய்வதாய் கூறப்படுகிறது. இப்படி தயாரிக்கும் சர்க்கரையை உணவில் சேர்த்து சமைப்பதால், நமது உடலுக்கு எந்த நன்மையையும் விளைவதில்லை.

பதப்படுத்திய பால்!
பதப்படுத்தி விற்கப்படும் பாக்கெட் பாலில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் என்ஸைம்கள் நீக்கப்பட்டுவிடுகின்றன. இப்படி தயாரிக்கப்படும் பாலை குடிப்பதால் நமது உடலுக்கு எந்தவிதமான நன்மையையும் இல்லை.

அயோடின்!
பதப்படுத்தி விற்கப்படும் பாலில் 10% அயோடின் நீக்கப்பட்டுவிடுகிறது. இதனால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம், மேலும், உடலுக்கு தேவையான பாலில் இருக்கும் முக்கிய திறன்கள் கிடைக்காமல் போகின்றன.

வெள்ளை அரிசி!
சுத்திகரிப்பு செய்து விற்கப்படும் வெள்ளை அரிசி உடனடியாக உடலில் க்ளுகோஸ் அளவை அதிகரிக்க கூடியது. இதனால் தான் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது.

உப்பு!
நாம் பயன்படுத்தி வரும் சுத்திகரிப்பு செய்து விற்கப்படும் உப்பு சோடியம் க்ளோரைடு ஆகும். இதனால் தான் இதய நோய்கள் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. மேலும், இதை தினமும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

தவிர்க்க வேண்டியது அவசியம்!
நாம் அன்றாடம் உட்கொண்டு வரும் உணவுகள் தான் இந்த சுத்திகரிப்பு செய்த வெள்ளை அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு. இதற்கு பதிலாக உணவில் அதிகம் தானியங்கள், கரும்பு சர்க்கரை, மற்றும் இயற்கையாக எடுக்கப்படும் உப்பை பயன்படுத்த துவங்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications