வயதாவதை தடுக்க இந்த புதிய வழியை ஃபாலோ பண்ணலாம். எப்படி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

முதுமையடைவதை யாராவது விரும்புவார்களா? இளமையாகவே இருக்க விரும்பினாலும் நமது உடலியல் கூற்றுப்படி வரும் மாற்றங்கள் தவிர்க்க இயலாததே.

The compound which reduces ageing process

இளமையின் ரகசியம் என்னவென்றால் நமது உடலில் உள்ள செல் வளர்ச்சியை எப்போதும் ஒரே மாதிரி தக்க வைத்தால் நாம் இளமையாக இருகலாம். செல்வளர்ச்சி எப்போது குறைகிறது? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனர்ஜி தரும் NAD :

எனர்ஜி தரும் NAD :

நமது உடலின் அமைப்பை தக்க வைத்துக் கொள்ள NAD எனப்படும் உபகரணி முக்கியம். இது பி காம்ப்ளக்ஸிலிருந்து உருவாக்கப்படுகிறது.

கோ என்சைமாக செயல்படுகிறது. சக்தியை தரவும் இது பயன்படுகிறது. இந்த NAD குறையும் போது உடல் எடை அதிகமாகும். இன்சுலின் சுரப்பு குறையும். உடல் உழைப்பு குறையும்.

 ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

இந்த நிகோடினிக் அமிலம் தாவரங்களிலும் இயற்கையாக கிடைக்கிறது என வாஷிங்க்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

முட்டைகோஸ், புரோக்கோலி, வெள்ளரிக்காய் அவகாடோ ஆகியவை NAD உருவாக்க தேவையாக இயற்கை பொருளை (NMN) பெற்றுள்ளது .

சோதனை எலி :

சோதனை எலி :

வயதாகும் பரிசோதனை எலியிடம் இந்த சோதனையை மேற்கொண்டனர். இவற்றின் உடல் உழைப்பு குறைந்திருந்தது.

எனர்ஜி வளர்சிதை மாற்றம் நடைபெறுவதும் குறைந்து காணப்பட்டது. இதனால் செல் வள்ர்ச்சி குறைந்து முதுமை தொடங்கியது.

ஆய்வில் மாற்றங்கள் :

ஆய்வில் மாற்றங்கள் :

இந்த எலிகளுக்கு தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட NMN வழங்கப்பட்டது. இதனால் அவற்றின் எனர்ஜி வேகம் அதிகரித்தது.

உடலின் இயக்கங்களும் அதிகரித்தன.நோய் எதிர்ப்பு மண்டலம் நன்றாக செயல்பட்டது. முக்கியமாய் மைட்டோகாண்ட்ரியா நன்றாக செயல்பட்டது.

இளம் எலிகளிடமும் பரிசோதனை :

இளம் எலிகளிடமும் பரிசோதனை :

அதே சமயம் இந்த NMN இளம் எலிகளிடம் எந்த மாற்றத்தையும் உருவாக்கவிலை. காரணம் அவற்றின் உடலிலேயே அதிக NAD உற்பத்தி செய்ய முடியுமென்பதால் அவற்றிற்கு NMN தேவைப்படுவதில்லை.

முதுமை தடுக்க உடனடி எனர்ஜி :

முதுமை தடுக்க உடனடி எனர்ஜி :

NMN நீரில் கரைத்து எலிகளுக்கு தரும்போது அவை வேகமாக ரத்த நாளங்களுக்கும் சென்று NAD யாக மாறி திசுக்களுக்கு உடனடியாக எனர்ஜியை அளித்து வயதாகும் மாற்றத்தை தடுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The compound which reduces ageing process

A new research reveals that a natural compound which found in the food which reduces ageing process.
Story first published: Wednesday, November 2, 2016, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter