இறைச்சியிலுள்ள புரோட்டின் நன்மை தருமா? கெடுதல் தருமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

புரோட்டின் நமது உடலின் செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு, டிஎன்ஏ உருவாக்கத்திற்கு மற்றும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கும் மிக முக்கியமானதாகும்.

உணவிலுள்ள புரொட்டின் ஜீரணிக்கப்பட்டு, அமினோ அமிலங்களாக பிரிகிறது. இந்த அமினோ அமிலங்கள் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. முக்கியமாய் உடலில் மிக அடர்த்தி வாய்ந்த நச்சான அமோனியாவை வெளியேற்றுகிறது.

Meat protein induces obesity

அமோனியா உடலில் எல்லா பாகங்களிலும் உற்பத்தியாகிறது. அவை அப்படியே தங்கிவிட்டால், நரம்பு மண்டலம், மூளையை சிதைத்துவிடும். அதனை வெளியேற்றும் மிக முக்கிய பணியை புரோட்டினிலுள்ள உள்ள அமினோஅமிலங்கள் செய்கின்றன.

ஆனால் இறைச்சியிலுள்ள புரோட்டின் உடல் எடையை அதிகரிக்கும் என தெரியுமா? இது ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புரோட்டின் உணவுகள் தாமதமாகவே ஜீரணிக்கும். முதலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு பின்னர் புரோட்டின் உணவுகள் ஜீரணமாகும்.

Meat protein induces obesity

அதுவும் இறைச்சியிலுள்ள புரோட்டின் உடலில் தங்கி, பின்னர் கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் உணவு அறிவியல் துறை செய்த ஆராய்ச்சி ஒன்றில் இறைச்சியிலுள்ள புரோட்டின் குண்டாவதற்கு காரணமாகிறது என தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரை ஜர்னல் ஆஃப் மெடிக்கல் அசோஸியேஷன் என்னும் மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது.

Meat protein induces obesity

தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு அதிக புரோட்டின் அதிக கலோரி கொண்ட உணவுகளை ஒரு பிரிவிற்கும், அதிக புரோட்டின் குறைந்த கலோரி உணவுகளை மற்றொரு பிரிவிற்கும் அளிக்கப்பட்டது.

இதில் இரண்டு பிரிவிற்குமே உடல் எடை அதிகரித்தது . அதேபோல் இறைச்சியிலுள்ள புரோட்டின் மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பை ஆராயும் விதமாக சுமார் 170 நாடுகளில் ஆராய்ச்சி நடந்தது.

Meat protein induces obesity

இதில் இறைச்சியிலுள்ள புரோட்டினும் உடல் பருமனுக்கு காரணம். உணவிலுள்ள அதிக சர்க்கரை அளவு 50 % உடல் பருமனுக்கும், அதே போல் அதிக அளவு புரோட்டின் 50 % உடல் பருமனுக்கும் காரணம் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே உடல் எடையை சீராக வைக்க கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமல்லாமல், புரோட்டின் உள்ள உணவுகளிலும் கவனம் வைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

English summary

Meat protein induces obesity

Meat protein induces obesity
Story first published: Thursday, August 4, 2016, 15:45 [IST]