மூச்சுக் காற்றில் வரும் பூண்டு நாற்றத்தை எப்படி தடுப்பது என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பூண்டு பல அரிய மருத்துவ குணங்களை கொண்டது. உடலின் நச்சுக்களை வெளியேற்றி, சாதரண காய்ச்சலிலிருந்து புற்று நோய் வரை விரட்டும் மகத்துவம் கொண்டது.

இருந்தாலும் பெரும்பாலோனோர் குறிப்பாக இளம் வயதினர் பூண்டை சாப்பிட பயப்படுவார்கள். காரணம் அதனால் சுவாசத்தில் வரும் பூண்டு வாசம் அசௌகரியத்தை தரும். இதற்காகவே அதனை தவிர்ப்பார்கள்.

மூச்சுக்காற்றில் வரும் பூண்டு வாசத்தை எப்படி தடுக்கலாம் என ஆராய்ச்சி ஒன்று நடந்தது. இந்த பிரச்சனைக்கான தீர்வையும் கண்டுபிடித்தனர். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஏன் சுவாசத்தில் பூண்டு நாற்றம் வருகிறது?

ஏன் சுவாசத்தில் பூண்டு நாற்றம் வருகிறது?

பூண்டிலுள்ள டைஅல்லைல் மீத்தைல் சல்ஃபைட், டைஅல்லைல் டை சல்ஃபைட் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன.

இவை எளிதில் ஆவியாகிவிடுபவை. இவை ரத்தத்தில் கலந்து இத்தகையக விரும்பத்தகாத வாசத்தை கொடுத்துவிடுகின்றன.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

ஒஹியோவிலுள்ள ஒஹியோ ஸ்டெட் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு சில பூண்டு பற்களைகொடுத்து 20 நொடிகள் மெல்லச் சொன்னார்கள்.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

பின்னர் அவர்களை பல பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவிற்கு நீர், மற்றொரு பிரிவிற்கு ஆப்பிள், இன்னொரு பிரிவிற்கு சூடுபடுத்திய ஆப்பிள் என லெட்யூஸ், புதினா க்ரீன் டீ ஆகியவற்றையும் அந்தந்த பிரிவிற்கு உடனடியாக கொடுத்தார்க

பூண்டு நாற்றம் குறைந்ததா?

பூண்டு நாற்றம் குறைந்ததா?

அதன் பின் சுவாசத்தை கணக்கிடும் ஸ்பெக்ட்ரோமீட்டர் கொண்டு பூண்டின் வேதிப் பொருட்களை அளந்தனர்.

இதில் ஆப்பிள், லெட்யூஸ் சாப்பிட்டவர்களுக்கு சுவாசத்தில் நாற்றம் உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் 50 சதவீதம் குறைந்திருந்தது.

புதினா :

புதினா :

புதினா சாப்பிட்டவர்களுக்கு ஆப்பிள், லெட்யூஸ் சாப்பிட்டவர்களை விடவும் பூண்டு நாற்றம் வெகுவாக குறைந்திருந்தது.

மாற்றம் இல்லை :

மாற்றம் இல்லை :

க்ரீன் டீ குடித்தவர்களிடம் பெரிய மாற்றம் இல்லை. பூண்டு வாசனை அப்படியே இருந்ததாத ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

 புதினா சிறந்தது

புதினா சிறந்தது

இதில் குறிப்பாக பூண்டு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் புதினா உண்டவர்களுக்கு முழுவதும் பூண்டு நாற்றம் போயிருந்ததாக கூறினர்.

எனவே புதினா மற்றும் ஆப்பிள் சாப்பிட்டவர்களுக்கு பூண்டு நாற்றம் வருவது முற்றிலும் தடுக்கப்படும் என ஆராய்ச்சியின் இறுதியில் கூறியிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to control garlic breath

Eat apple, mint to get rid of Garlic breath
Story first published: Monday, October 3, 2016, 20:30 [IST]
Subscribe Newsletter