மேகிக்கு அடுத்து அதே காரணத்தில் சிக்கியதா நியூடெல்லா? ஆரோக்கியத்திற்கு அபாயமா?

Posted By:
Subscribe to Boldsky

நாள் சரியாக இல்லையா நியூடெல்லா சாப்பிடுங்க, வேலை போய்விட்டதா நியூடெல்லா சாப்பிடுங்க? செம கடுப்பில் இருக்கிறீர்களா நியூடெல்லா சாப்பிடுங்க என்பது போல எதற்கெடுத்தாலும், எந்த காரணமானாலும், ஏன் எந்த உணவாக இருந்தாலும் அதனுடன் நியூடெல்லா சேர்த்து சாப்பிடும் நபர்கள் ஏராளாமானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அனைவரும் விரும்பி உட்கொள்ளும் நியூடெல்லா அவ்வளவு நல்லதல்ல என்பது போன்ற செய்தி ஒன்று நேற்று மிரர் மற்றும் தி சன் போன்ற சர்வதேச இணையங்களில் வெளியாகின. ஆனால், வெளியான சில மணி நேரங்களில் இரவோடு, இரவாக தனது தளங்களில் இருந்து அந்த செய்தியை ஊடகங்கள் நீக்கிவிட்டன.

அந்த செய்தியில் அவர்கள் நியூடெல்லா உடல்நலனுக்கு நல்லதில்லை என்றும், மூளையின் செயற்பாட்டை பாதிக்கிறது என்றும் கூறியிருந்தனர். மேலும், அந்த செய்தியில் ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டிருந்த தகவல்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூலப்பொருட்கள்!

மூலப்பொருட்கள்!

நியூடெல்லாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள்...

*சர்க்கரை

*மாற்றம் செய்யப்பட்ட பாமாயில்

*ஹாசில் நட்ஸ்

*கோகோ

*ஆடை நீக்கிய பால் பவுடர்

*வே பவுடர் (Whey Powder)

*சோயா லெசித்தின் (Soy lecithin) மற்றும்

*வெண்ணிலன்

சோயா லெசித்தின் (Soy lecithin)

சோயா லெசித்தின் (Soy lecithin)

படிக்க அனைத்தும் ஆரோக்கியமானதாக இருப்பினும், சோயா லெசித்தின் என்பது மரபண ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட ஒன்றாகும். இது உடலில் செரிமான சிக்கல் உண்டாக்கும் தன்மை கொண்டது. இது அதிகளவில் பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த மூலப்பொருளை சிறுவர்கள், மார்பக புற்றுநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள கூடாது என கூறப்படுகிறது.

வெண்ணிலன்!

வெண்ணிலன்!

வெண்ணிலன் மன அழுத்தத்தை குறைக்கவல்லது அல்ல. இது மடகாஸ்கர் மலைகளில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் இது தரம் குறைவான கெமிக்கல் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. சில ரிபோர்ட்களில் இதில் எம்.எஸ்.ஜி கலப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேகி!

மேகி!

எம்.எஸ்.ஜி கலப்பு பிரச்சனையில் தான் மேகி சிக்கி தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.ஜி கலப்பு மெல்ல, மெல்ல உடலில் விஷத்தன்மை உண்டாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இது நாள்பட தலைவலி, அலர்ஜிக் மாற்றங்களை வெளிப்படுத்தும்.

பாமாயில் (Palm Oil)

பாமாயில் (Palm Oil)

பாமாயில் கலப்பு இருக்கிறது எனில், இரண்டு டீஸ்பூன் நியூடெல்லாவில் 200 கிராம் அளவு கலோரிகள், 11 கிராம் கொழுப்பு, 21 கிராம் சர்க்கரை அளவு இருக்கிறது என அறியப்படுகிறது. இது கோக்-ல் பாதியளவுக்கு சமம் என்றும் அந்த செய்தி தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது எந்த அளவு உண்மை?

இது எந்த அளவு உண்மை?

இப்படி நியூடெல்லாவில் இருக்கும் உட்பொருகள் பற்றி மிக தெளிவாக தகவல்கள் மற்றும் அதன் தாக்கத்தை செய்தியில் கூறிய பிறகு, மறுநாளே அதை நீக்க வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது என்பது பெரும் கேள்வியை எழுப்புகிறது.

இதன் பின்னணியில் வர்த்தக ரீதியாக அரசியல் நடக்கிறதா அல்ல முழு விவரம் இல்லாமல் இவர்கள் வெளியிட்டு நீக்கிவிட்டார்களா என்பது குழப்பமான சூழலை உண்டாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Source

English summary

Here’s Why You Should Stop Eating Nutella Immediately

தி சன் நீக்கிய செய்தி பக்கம்!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter