Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
தேனின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா?
தேனின் சுவையுடன் வேறு எதையாவது ஒப்பிட முடியுமா? அதன் சுவையைப் போலவே அதன் மருத்துவ குணங்களும் ஒப்பில்லாதது.
தேனிக்கள் விதவிதமான மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களிடமிருந்து தேனை சேகரித்து வைத்திருக்கும். அதுவும் மலைத் தேனில் குறிப்பிட்ட விசேஷ குணங்கள் உண்டு. அதுதான் உயர்ந்த தேன் என்று கூறுவார்கள். தேனில் 75 வகையான சத்துக்கள் உள்ளன. எளிதில் ஜீரணமடைந்துவிடும்.

தேனுடன் கலந்து சாப்பிட உகந்த பொருட்கள் :
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் , ஜலதோஷம் அண்டாது.
தினமும் வெதுவெதுப்பான வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் , உடல் நிச்சயம் இளைக்கும். நச்சுக்கள் வெளியேறும். உடல் இளமை பெறும்.
மிதமான சூட்டில் பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பு தூண்டப்படும்.
ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், வயிற்றுப்புண், இரப்பை அழற்சி , பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் குணம் தேன் மெழுகில் உள்ளது.
சுத்தமான தேனை எப்படி கண்டறியலாம் ?
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
ஒரு கப் நீரில் தேனை சில சொட்டு விடுங்கள். அது கரையாமல் அடியில் போய் தங்கினால் சுத்தமான தேனாகும்.
செய்யக் கூடாதவை :
தேனை சுட வைக்கக் கூடாது. சூடான திரவங்களில் சேர்க்கக் கூடாது. தயிருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வெதுவெதுப்பான நிலையிலேயே பருக வேண்டும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



